தமிழகத்தில் இன்று
மீண்டும் தலைதூக்கிய ஈவ் டீசிங்: மாணவி தற்கொலை
சேலம்:
சேலம் அருகே "ஈவ் டீசிங் மிரட்டலால் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள திம்மம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி அகிலா (17). இவர் தினம்பள்ளிக்குச் சென்று வரும் வழியில் 3 பேர் அடிக்கடி தொல்லை செய்யத் தொடங்கினர். அகிலா பயணம் செய்யும் தனியார் பஸ்சில் இவர்களும் ஏறி, அடிக்கடிபயறுத்தி வந்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக இந்தப் பெண்ணை பின் தொடர்ந்து உனது "ஆடைகளை அவிழ்த்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். உலியாபுரம் என்ற இடத்தில்நடந்த கோயில் கும்பாபிஷேகம் ஒன்றிற்கு வெள்ளிக்கிழமையுடன் தினம் அகிலா சென்றுள்ளார்.
அங்கும் இந்த 3 பேரும் பின் தொடர்ந்து, துன்புறுத்தி வந்துள்ளனர். அடுத்த நாள் பள்ளிக்கு வரும்போது, அகிலாவின் உடைகளை அவிழ்த்து விடுவதாகமிரட்டியுள்ளனர்.
இதனால் பீதியடைந்த அகிலா, தன் பெற்றோர்களிடம் இது பற்றிக் கூறி, பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என மறுத்துள்ளார். ஆனால், அவரதுபெற்றோர்கள் அகிலாவிடம், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது பயப்படாமல் பள்ளிக்குப் போ, எனக் கூறியுள்ளனர்.
இதனால், மிகவும் மன உளைச்சல் அடைந்த அகிலா, வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்லாமல், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக அகிலாவின் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக திம்மம்பட்டியில் ஆட் டாடிரைவாக உள்ள யூசுப் (20), நூர் முகமது (19), ஜாஃபர் ஆகியோரைக் கைது செய்தனர்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் தொடரும் இந்தக் கொடுமை குறித்து உங்கள் கருத்து என்ன?
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications