தமிழகத்தில் இன்று
ஜோதிகா தன் அக்கா நக்மாவின் சென்னை செனடாப் வீட்டில் தங்கிக்கொண்டு தான் படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறார். விரைவில் சொந்தமாகவோஇல்லை வாடகைக்கோ வேறு வீடு பார்த்து தங்க முயற்சித்து வருகிறாராம். ஏன்? என்று விசாரித்தோம்.
யாரும் ஜோதிகாவை, நக்மாவின் தங்கை என்பதனால் நடிக்க கூப்பிடக்கூடாது என்பது ஜோதிகாவின் அடிமனதில் உள்ள ஆசை. தன் சொந்தக்காலிலேயேநிற்க வேண்டும் என்பது இவருடைய லட்சியமாம். கமலுடன் தெனாலியில் நடிக்கிறார். அடுத்து ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பதுதான் இவரதுலட்சியமாம்.
வாழ்த்துக்கள்.
விஜயகாந்துக்கு இரண்டுகோடி சம்பளம்?!
நடிகர் விஜயகாந்த் ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறாராம். சம்பளம் இரண்டு கோடி ரூபாய் என்கிறார்கள்கோடம்பாக்கத்தில்.
சினிமா உலகம் உள்ள நிலையில் நடிகர் சங்கத்தலைவரான விஜயகாந்தே இரண்டு கோடிரூபாய் சம்பளமாக வாங்கினால் மற்றநடிகர்கள்,டைரக்டர்,கேமராமேன், இசையமைப்பாளர் என்று பலரையும் சேர்த்து எத்தனை கோடியில் ஒரு படம் முடியும்?
நடிகர்களுக்கே இவ்வளவு சம்பளம் என்றால் அப்புறம் தயாரிப்பாளர்களுக்கு என்ன லாபம் கிடைக்கும்?என்கிற கேள்வியும்கோடம்பாக்கத்திலிருந்தே தான் வருகிறது. நியாயம் தானே?.
சீக்கிரம் பேசுவார்
நடிகர் சத்யராஜின் கல்லூரித்தோழர் நிழல்கள் ரவி. இருவரும் சேர்ந்து மிமிக்ரிகள் நடத்துவார்களாம். நிழல்கள் ரவிக்கு ஒரே ஒரு மகன். அவனுக்கு ஆறுவயதாகிறது. இன்னும் பேச்சு வரவில்லையாம்..
சீக்கிரம் பேச வாழ்த்துகிறோம்.
பள்ளிக்கூடத்தில் சினிமா வாரிசுகளின் கூட்டணி
டைரக்டர் பி.வாசுவின் மகன் பிரசாந்த், நடிகர் சத்யராஜின் மகன் சிபி. பிரபுவின் மகன் விக்ரம். மூவருமே டான்போஸ்கோ பள்ளியில் ஒரே வகுப்பில் படித்துவருகிறார்கள். படிப்பில் படு கில்லாடிகளாம்.
சுந்தர்.சியும், விநாயக சுந்தர வேலும்
குஷ்பூ, தனது கணவர் சுந்தர்.சியை மாமா என்று அழகாக கூப்பிடுகிறார். சுந்தர்.சியின் நிஜப்பெயர் என்ன தெரியுமா?விநாயக சுந்தர வேல். இவர்தாயாருக்கு எட்டாவது பிள்ளையாம்.
இவர் வயிற்றில் இருந்த பொழுது இவரது தாயார் இந்தக் குழந்தை வேண்டாம், வயிற்றை விட்டு வெளியே வரட்டும் என்று குற்றாலம் அருவியில்வயிற்றைக்காட்டி, அருவியை விழவைத்து பிறந்தவராம் விநாயக சுந்தர வேல். விரைவில் தந்தையாகப்போகும் சுந்தர்.சியே சொன்ன தகவல் இது.
ஆணாக மாறி ரோஜாவின் உதட்டை... ரம்பாவின் விபரீதமான ஆசை
நடிகை ரம்பாவுக்கு, அழகு சேர்ப்பது அவரது இடையழகும், தொடையழகும் தான். ஆனால் அவருக்கு மீனாவையும்,ரோஜாவையும் ரொம்பபிடிக்குமாம். மீனாவின் கண்கள் மற்றும் உதட்டழகையும், ரோஜாவின் உதட்டழகையும் பார்க்கும் பொழுது தான் ஒரு ஆணாக மாறி அவர்களைக்கட்டிப்பிடிக்கத் தோன்றும் என்கிறார்.
சிரிப்புக்கு பின்னால் இத்தனை சோகங்களா?!
மிகக்குறுகிய காலத்தில் தன்னுடைய தனித்திறமையால் சினிமா உலகில் வளர்ந்து வருபவர்.காமெடி நடிகர் வையாபுரி. தேனியை சேர்ந்த இவர் சொந்தக்கதைசோகமயமானது. அப்பா கிடையாது. அம்மா நோயாளி. அண்ணன் தம்பிகள் உள்ளனர்.
இவரது மணியார்டரை எதிர்பார்த்து வாழும், இவரது சகோதரர்கள், சொந்தத் தாயைக்கூட கவனிப்பதில்லையாம். திருமணம் என்று ஒன்று தனக்குநடந்துவிட்டால் தங்களுக்கு வரும் மணியார்டர் பணம் நின்று விடுமோ என்று பயந்து கொண்டு திருமணப் பேச்சையே குடும்பத்தில் தவிர்த்து வருகிறார்களாம்.
இவருக்கு வரும் பல ரசிகர்கள், உங்களுக்கு பெண் பார்த்துள்ளோம் என்று சில போட்டோக்களை அனுப்பி வைப்பதைப்பார்த்தால் ஆறுதலாக உள்ளதாம்.எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்து பெண் பார்க்கும் படலத்தில் தனியே குதித்து விட்டாராம்.
சினிமாவில் பலரை சிரிக்கவைக்கும் வையாபுரி, மற்றவர்களை சிரிக்கவைக்கும் தன் வாழ்கை சோகம் நிறைந்ததாக இருப்பதை தன் நெருங்கிய நண்பர்களிடம்கூறி கண்ணீர் வடிக்கிறார்.
சோகத்தின் வெளிப்பாடுதான் காமெடியா வையாபுரி?
கோடம்பாக்கத்தில் ஒரு ஆராய்ச்சி
விரும்புகிறேன் படத்தில் ஸ்நேகா என்கிற பெயரில் பிரசாந்த்க்கு ஜோடியாக அறிமுகம் ஆகும் ஸ்நேகாவின் நிஜப்பெயர் சுஹாசினி. இவர் ஒரு மலையாளப்படத்தில் நடித்தார். படத்தின் பெயர் இங்கன ஒரு நிலாப்பாட்டு.
இவரது சித்தப்பாவைத்தான் டான்ஸ் மாஸ்டர் கலா மணமுடிக்கப் போகிறார். ஏற்கனவே (ஸ்நேகா) மலையாளப்படத்தில் நடித்ததை மறைத்து, புதிதாகஅறிமுகமாவது போல் ஸ்நேகாவே பத்திரிகைகளில் சொல்லி வைக்க தற்பொழுது இவரைப்பற்றிய பூர்விக ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறதுகோடம்பாக்கம்.
நல்ல ஆராய்ச்சி தொடரட்டும்.
குறத்தி வேடத்தில் மீனா
சிவகாமி என்ற படத்தில் டைட்டில் ரோலில் நடித்துவருகிறார் மீனா. குறத்தியாக முதன் முதலாக நடிக்கும் மீனா தனக்கு இந்தப்படம் பலபரிசுகளையும்,பாராட்டுக்களையும் பெற்றுத்தரும் என்கிறார்.
வாழ்த்துக்கள் மீனா.
கமலின் அடுத்த படங்கள்
தெனாலிக்கு அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார் நடிகர் கமல். தெனாலி படம் முழுமையாக முடிந்தவுடன் தயாரிப்பாளர் தாணுவுக்கு ஒருபடம்,டைரக்டர் ஷங்கரின் எஸ். பிலிம்ஸூக்கு ஒரு படம் நடிக்க ஓப்புக்கொண்டிருக்கிறாராம்.
எஸ்.பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கவில்லை. அந்த கம்பெனியின் மிகமுக்கிய பங்குதாரர்களில் ஒருவரான மாதேஷ் டைரக்ட்செய்கிறார்.
சிக்கலில் வல்லரசு இயக்குனர்
வல்வரசு படத்தின் இயக்குனர், மகாராஜன் தன் அடுத்த படத்தை யாருக்கு பண்ணுவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
வல்லரசு படத்தை இந்தியில் சன்னிதியோலை வைத்து மகாராஜன் இயக்க ஒப்புக்கொண்டுவிட்டார். ஆனால், அடுத்த படம் விஜயகாந்தை வைத்துப்பண்ணினால் தான் வல்லரசு இந்தி உரிமை கொடுப்போம் என்கிறாராம் வல்லரசு தயாரிப்பாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.சுரேஷ்.
வல்லரசு மனசு வைத்தால் பிரச்சினை தீரலாம்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications