தமிழகத்தில் இன்று
பசுவதை தொடர்ந்தால் உண்ணாவிரதம்...எச்சரிக்கிறார் காஞ்சி சுவாமிகள்
காஞ்சிபுரம்:
பசுக்கள் சித்ரவதை செய்யப்படுவதைக் கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாடு முழுவதும் பசுக்கள் சித்ரவதை செய்யப்படுவதைக் கண்டித்து ஒரு வாரம் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. வரும் 23 ம் தேதி இந்தப்போராட்டத்தை நான் தொடங்கி வைக்கிறேன். அதே நாள் காஞ்சிபுரத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் குறித்த தேசிய கருத்தரங்கு நடக்கிறது. அந்தகருத்தரங்கில் மத்தியஅமைச்சர் மேனகா காந்தி கலந்து கொள்கிறார்.
ஒவ்வொரு குடும்பமும் பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். பசுக்களை விற்பதற்கோ வதை செய்வதற்கோ லாரிகளில் ஏற்றிச் செல்வதை லாரிஅதிபர்களும், டிரைவர்களும் தவிர்க்க வேண்டும்.
பசுக்கள் சித்ரவதை செய்யப்படுவது குறித்து அனைத்து மத உறுப்பினர்கள் அடங்கிய கிராம கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படும். பசுவதை செய்யப்படுவதைதடுத்த நிறுத்தக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்யப்படும்.
ஜனகல்யாண், சர்வோதயா மற்றும் அரசு சாரா இயக்கங்கள் சார்பில் பிரச்சார குழுக்கள் அமைக்கப்படும். அவர்கள் கிராமம், கிராமமாகச்சென்று பசுக்கள் வதை செய்யப்படுவதற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவார்கள்.
இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதைக் கண்டித்து நான் காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications