தமிழகத்தில் இன்று
நீதிமன்றம் வரத் தவறிய ஜெயலலிதாவின் கார்கள்
சென்னை:
ஜெயலலிதாவும், சசிகலாவும் ஹைதராபாத்தில் இருப்பதால் நீதிமன்றம் உத்தரவிட்டப்படி 21 வகை வாகனங்களும், தங்க வெள்ளி நகைகளும் செவ்வாய்கிழமை தனி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டவர்கள் மீது வருமானத்தை மீறி 66 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் சேர்த்தாக வழக்குதொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான அசையாச் சொத்துக்கள் ஏற்கனவே நீதிமன்றத்தால் முடக்கிவைக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அவர்கள் இருவருக்கும் சொந்தமான ரூ. 11.59 கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துக்களையும் முடக்கிவைக்க தனி நீதிபதி ஆறுகப் பெருமாள் ஆதித்தன் திங்கள் கிழமை மாலை உத்தரவிட்டார்.
அதன்படி 21 ரக கார்கள், 3 கோடியே 82 லட்சத்து 3190 ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள், 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 416 கிலோஎடையுள்ள வெள்ளி நகைகள், 15 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 98 வாட்ச்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும்ஒப்படைக்க வேண்டும்.
21 வகை கார்கள் எவை என்பதையும் நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. மாருதி ஜிப்சி (2 லட்சத்து வாயிரம் ரூபாய்), டாட்டா சுமோ (ரூ.4 லட்சத்துஆயிரம்), டாடா சுமோ (3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பு), டாடா சியாரா (ரூ.3 லட்சத்து 86 ஆயிரம்), டாடா சியாரா (ரூ.5 லட்சத்து 11 ஆயிரம்),டாடா சியாரா (ரூ.5 லட்சத்து 11 ஆயிரம்), ஆடம்பர பஸ் (ரூ.32 லட்சத்து 40 ஆயிரம்), டாடா எஸ்டேட் (ரூ.2 லட்சத்து 81 ஆயிரம்), மஹிந்த்ரா அர்மடா(ரூ.3 லட்சத்து 30 ஆயிரம்), டெம்போ டிராவலர் (ரூ.4 லட்சத்து 24 ஆயிரம்), மாருதி எஸ்டீம் (ரூ.5 லட்சத்து 25 ஆயிரம்), பஜாஜ் டெலிவரி வேன் (32ஆயிரத்து 721).
இறக்குமதி செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் (ரூ.9 லட்சத்து 15 ஆயிரம்), சுவராஜ் மாஸ்டா (ரூ.5 லட்சத்து 57 ஆயிரம்), சுவராஜ் மாஸ்டா (ரூ.5 லட்சத்து 57ஆயிரம்), சுவராஜ் மாஸ்டா (ரூ.5 லட்சத்து 57 ஆயிரம்), மாருதி வேன் (2 லட்சத்து 22 ஆயிரம்) ஆகிய 21 வகை வாகனங்களை நீதிமன்றம் முடக்கிவைத்துள்ளது.
இவை தவிர சுவராஜ் மஸ்டா வேன், டிரக் ஜீப், பஜாஜ் டெம்போ ஆம்னி பஸ் ஆகிய மூன்று வாகனங்கள் உண்டு. இவை அவர் முதல்வராகபதவியேற்பதற்கு முன்பு வாங்கிய வாகனங்கள் என்று கூறி நீதிமன்றம் விட்டு வைத்துள்ளது. இவை அனைத்தையும் செவ்வாய் கிழமை நீதிமன்றத்தில்ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜெயலலிதாவும், சசிகலாவும் தற்போது ஹைதராபாத்தில் இருப்பதால் அவற்றை ஒப்படைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அதோடு தனி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications