தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அமைதித் திட்டத்தை நிராகரித்தது தொண்டைமான் கட்சி

கொழும்பு:

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா உருவாக்கியுள்ள அமைதித் திட்டத்திற்கு, சந்திரிகாவின் கூட்டணியில்இடம் பெற்றுள்ள முக்கியக் கட்சியான இந்திய வம்சவாளித் தமிழர்களின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது இக்கட்சி. இதில், ரப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களல்பணியாற்றும் தமிழர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மிகப் பெரும் ஓட்டு வங்கி இந்தக் கட்சிக்கு உண்டு.

இக்கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஆர்.யோகராஜன் கூறுகையில், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண அதிபர் சந்திரிகா உருவாக்கியுள்ள அமைதித் திட்டத்தில்எங்களுக்கு உடன்பாடில்லை. எங்களது எதிர்ப்பை அரசுக்குத் தெரிவித்து விட்டோம்.

தமிழர் கட்சிகள் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளின் முடிவில் காணப்படும்வெளியாகும் தீர்வுக்குப் பிறகே நாங்கள் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்.

ஆகஸ்ட் மாதத்தில் அரசியல் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதை எதிர்த்து அல்லது ஆதரித்து வாக்களிப்பது குறித்துஇன்னும் முடிவு செய்யவில்லை.

முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு அரசு யோசனை தெரிவித்துள்ளது. அப்பேச்சுக்கு முன்பு இந்தப் பிரச்சினையில் எங்களது நிலையை அரசுக்குத் தெரிவிக்கவிரும்புகிறோம் என்றார் அவர்.

சில நாட்களுக்கு முன்பு அமைதித் திட்டத்தை எதிர்த்து கூட்டறிக்கை விட்ட 8 தமிழர் கட்சிகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் ஒன்று. தமிழர்களின்நலனைக் கருத்தில் கொள்ளாமல், அதிபர் சந்திரிகாவின் ஐக்கிய முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் அமைதித் தீர்வுக்கான திட்டம் குறித்து ஒப்பந்தம்செய்து கொண்டது, அரசியல் அயோக்கியத்தனம் என்று இக்கட்சி வர்ணித்துள்ளது.

ஆளும் ஐக்கிய முன்னணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ். இக்கட்சியின் தலைவர் ஆறுமுகம்தொண்டைமான், அதிபர்சந்திரிகாவின் அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கிறார்.

இக்கட்சி இதுவரை, இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்தி வரும் போரில் அவ்வளவாகத் தலையிட்டதில்லை. இப்போதுதான்முதல் முறையாக அரசை எதிர்த்து அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு, குடியுரிமைவழங்குவது தொடர்பான பிரச்சினையில் மட்டுமே இக்கட்சி இதுவரை ஆர்வம் காட்டி வந்தது.

யோகராஜன் கூறுகையில், இலங்கையின் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணியாற்றும் 1 லட்சம் தமிழர்கள் இன்னும் குடியுரிமை தரப்படாமல்உள்ளனர். இப்பிரச்சினையைத் தீர்க்க ஐக்கிய கூட்டணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தவறி விட்டன என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+