தமிழகத்தில் இன்று
ஜெயலலிதாவின் கார்கள்: நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை
சென்னை:
ஜெயலலிதாவுக்கு சொந்தமான 21 கார்களை முடக்கி வைக்க தனிநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால தடை விதித்தது.
அந்த வாகனங்களை விற்க மாட்டேன் என்று தனிநீதிமன்றத்தில் ஜெயலலிதா உறுதி அளிக்க வேண்டும் என்றுஉயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான ரூ 66.5 கோடி ஊழல் வழக்கில்ஜெயலலிதாவுக்கு சொந்தமான 21 வகை கார்களையும், தங்க, வைர, வெள்ளி நகைகளையும் முடக்கி வைக்கமுதலாவது தனி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.இம்மனு நீதிபதி அக்பர் பாஷா காதிரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்கள்வாதத்திற்கு பின்பு தனிநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார் நீதிபதி அக்பர் பாஷா.
நீதிபதி கூறிய தீர்ப்பில், 21 வாகனங்களையும் விற்க மாட்டோம் என்று ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்குபேரும் பிரமாண வாக்குமூலம் ஒன்றை தனிநீதிமன்றத்தில் அளிக்க வேண்டும். அந்த வாகனங்களுக்கானஆர்.சி.புத்தகங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். ரூ 50 லட்சத்திற்கான ஒரு நபர் ஜாமீன் பத்திரத்தைஆகஸ்ட் முதல் வாரத்திற்கு முன்பாக வழங்க வேண்டும் என்றார். வழக்கை வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குத்தள்ளிவைத்தார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications