தமிழகத்தில் இன்று
கரும்பு டன்னுக்கு ரூ.1000 - வைகோ வரவேற்பு
சென்னை:
தமிழ்நாட்டில் கரும்பு டன்னுக்கு ரூ. 1000 என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது என்று ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோகூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1000 என்று விலை நிர்ணயம் செய்து முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இது வரவேற்கத்தக்கது.
மேலும், விவசாயிகளிடம் ஜப்தி கெடுபிடி இருக்காது, மின் இணைப்பு பெறுவதில் விவசாயிகளுக்கு உள்ள தடைகள் அகற்றப்படுமென்றும் முதல்வர்அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.
அதேபோல் கணினி யுகப் போட்டியில் தமிழக இளைஞர்களை மேலும் முன்னணிக்குக் கொண்டு செல்லும் வகையில் தொலைநோக்குச் சிந்தனையுடன்தகவல்தொழில்நுட்பப் பாடங்களில் இந்த ஆண்டு 17 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் காதுகளில் தேன் பாய்ச்சியதுபோல் உள்ளது. அதற்காக கருணாநிதிக்கு என்னுடைய நன்றியையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வைகோ.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications