தமிழகத்தில் இன்று
ரத்த தானப் போராட்டம் நடத்த முயன்ற மின்வாரிய ஊழியர்கள் கைது
சென்னை:
கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த தானப் போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத்தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில்புதன்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்யாமல்அப்புறப்படுத்தினர்.
இரண்டாவது நாளாக வியாழக்கிழமை அவர்கள் நூதனப் போராட்டம் என்ற பெயரில் ரத்த தானம் செய்யப்போவதாகக் கூறி மின்வாரிய அலுவலகம் முன்பு கூடினர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர்.
இதுபற்றி சென்னை நகர போலீஸ் கமிஷனர் பெ. காளிமுத்து கூறியதாவது:
நூதனப் போராட்டம் என்ற பெயரில் மொட்டை அடிப்பது, பாதி மீசையை எடுப்பது, பிச்சை எடுப்பது என்றபோராட்டங்கள் நடத்துவது சட்டத்துக்குப் புறம்பானது. இப்படிப்பட்ட போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது.
முதல் நாள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை மின்வாரிய ஊழியர்கள் நடத்தினர். அடுத்த நாள் வரமாட்டார்கள்என்ற நம்பிக்கையில் அவர்களைக் கைது செய்யாமல் அனுப்பி வைத்தோம்.
ஆனால், மறுநாளும் விநோதப் போராட்டம் என்று வீதிக்கு வந்தவர்களை கைது செய்து காவலில் வைத்துவிட்டோம். 15 நாட்கள் அவர்கள் சிறையில் இருப்பார்கள் என்றார் காளிமுத்து.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications