தமிழகத்தில் இன்று
மாமியாரின் நகைகளை கொள்ளையடித்த மருமகள்
சென்னை:
மாமியார் நகைகளைக் கொள்ளையடித்த மருமகள் கைது செய்யப்பட்டார். எங்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத மாமியாருக்கு புத்தி புகட்டுவதற்காகஇக் குற்றத்தை செய்ததாக போலீசில் மருமகள் வாக்குமூலம் அளித்தார்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலையில் வசிப்பவர் சுரேஷ்குமார். இவரது மனைவி சரோஜா. சரோஜா ஏற்கனவேதிருமணமாகி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தவர். அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சுரேஷ் குமார்.
இந்த திருமணத்தை சுரேஷ் குமாரின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. வீட்டுக்கே வரக் கூடாது என்று துரத்தி அனுப்பி விட்டார் சுரேஷ் குமாரின்தாயார்.
இதனால் சுரேஷ்குமாரும், சரோஜாவும் தனியே வசித்து வந்தனர். வறுமை அவர்களை வாட்டியது. இந்த நேரத்தில் துருக்கி நாட்டில் வாழும் ஒருவருக்குசிறுநீரகம் தேவை என்ற தகவல் இவர்களுக்கு கிடைத்தது. பணத்துக்காக சிறுநீரகத்தை விற்க சரோஜா முன் வந்தார்.
சுரேஷ்குமாரும், சரோஜாவும் துருக்கி நாட்டுக்குச் சென்று சிறுநீரகத்தை விற்று விட்டு வந்தனர். அதற்கான செலவையும் சிறுநீரகத்தை விலைக்குவாங்கியவரே ஏற்றுக் கொண்டார். எல்லா செலவும் போக கையில் 60 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.
அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் சரோஜாவால் வீட்டு வேலை எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் மனைவியை வீட்டுக்கு அழைத்துச்சென்றார் சுரேஷ்குமார்.
மருமகளை வேண்டாவெறுப்பாக ஏற்றுக் கொண்டார் மாமியார். மாமியாரின் கொடுமைகளை சகித்துக் கொண்டே உடல் நலம் தேறிய மருமகள்சரோஜா, நகைகளை மாமியார் எங்கே வைத்துள்ளார் என்று தெரிந்து கொண்டார்.
குணமாகி தனது வீட்டுக்கு திரும்பிய சில நாட்களில் மாமியார் வீட்டுக்கு தனியாக சென்று பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்சரோஜா. நகைகளைக் காணவில்லை என்று போலீசில் மாமியார் புகார் செய்தார்.
போலீஸ் விசாரணையில் சிக்கிய சரோஜா, நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டன. என்னைக் கொடுமைப்படுத்தியமாமியாருக்குப் பாடம் புகட்டுவதற்காக அவரது நகைகளைத் திருடியதாக போலீஸ் விசாரணையில் சரோஜா தெரிவித்தார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications