தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

புலிகளுக்கு ஆதரவாக இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்

காஞ்சிபுரம்:

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள்முகாமில் இருப்பவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

முகாமில் உள்ள 7 பெண்கள் உள்பட 21 பேரும் புதன்கிழமை உண்ணாவிரதம்மேற்கொண்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தாங்கள் இந்த உண்ணாவிரதம்மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அதே முகாமில் தங்கியுள்ள பாலன், விவேகானந்தன், முரளிதரன்,சிவம், மகேந்திர சிகாமணி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்றஉண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளர்.

தங்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் என்று கோரி அவர்கள்உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

1991-ம் ஆண்டு தமிழகக் கடற்பகுதியில் ஆயுதங்களுடன் இவர்கள் 5 பேரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதை அடுத்து அவர்களதுஉடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு செங்கல்பட்டுமருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் விரைந்து சென்று அவர்களுக்குச் சிகிச்சைஅளித்தனர்.

அவர்களில் 3 பேருடைய நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+