தமிழகத்தில் இன்று
சென்னை-பெங்களூர்-ஹைதராபாத் இடையே கண்ணாடி இழை கேபிள் இணைப்பு
விஜயவாடா:
சென்னை - பெங்களூர் - ஹைதராபாத் - விஜயவாடா இடையே நடப்பு நிதியாண்டில்4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு கண்ணாடி இழை கேபிள் (optical fibre cable) பதிக்கப்பட உள்ளது.
தொலைத் தொடர்பு துறையில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு சன்சார்சாரதி விருது விஜயவாடாவில் புதன்கிழமை வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென் மண்டல தொலைத் தொடர்பு திட்டங்கள்பொது மேலாளர் வெங்கட்ரமணி கலந்து கொண்டு பேசியதாவது:
டபிள்யு.டி.எம். (அலைபிரித்து பன்முனைப்படுத்தும்) திட்டத்தின் கீழ் சென்னை -பெங்களூர் - ஹைதராபாத் - விஜயவாடா இடையே சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர்நீளத்துக்கு கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட உள்ளது.
இதற்கான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுஇறுதிக்குள் இப் பணி முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்வெங்கட்ரமணி.












Click it and Unblock the Notifications