தமிழகத்தில் இன்று
இங்கிலாந்தைத் தோற்கடித்தது மே.இ.தீவுகள் - கடைசி ஓவரில் கிடைத்த ஆறுதல் வெற்றி
நாட்டிங்ஹாம்:
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில், ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள்கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்றுவருகிறது.
இங்கிலாந்துக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே கடைசி லீக் ஆட்டம்நாட்டிங்ஹாமில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே இறுதி ஆட்டத்துக்குஇங்கிலாந்தும், ஜிம்பாப்வேயும் தகுதி பெற்றுவிட்டன. சனிக்கிழமை இறுதி ஆட்டம்நடைபெற உள்ளது.
இதனால், வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒரு சம்பிரதாய ஆட்டமாகவேநடைபெற்றது. இப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில்இங்கிலாந்தைத் தோற்கடித்து ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
50 ஓவரில் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தனதுஇன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து, 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கடைசி ஓவரில் இங்கிலாந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 5 பந்துகளில் 3விக்கெட்டுகளை அந்த அணி இழந்ததால் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் கடைசி ஓவரை சிறப்பாக வீசி தனதுஅணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
இங்கிலாந்து அணியின் அலெக் ஸ்டீவர்ட் அவுட்டாகாமல் 100 ரன்கள் எடுத்தார்.முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள்எடுத்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் ஆட்ட நாயகராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications