தமிழகத்தில் இன்று
பிஜியில் புதிய ஆட்சி அமைக்க வெளிநாடுகளில் நிதி திரட்டும் மகேந்திர சவுத்ரி
வெலிங்டன்:
பிஜியில் புதிய ஆட்சி அமைக்க வெளிநாடுகளில் நிதி திரட்டும் நடவடிக்கையில்முன்னாள் பிரதமர் மகேந்திர சவுத்ரி ஈடுபட்டுள்ளார்.
இந்திய வம்சாவளிப் பிரதமரான மகேந்திர சவுத்ரி தலைமையில் பிஜியில் ஆட்சிநடைபெற்று வந்தது.
பிஜி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிப்படையினர் கடந்த மே 19-ம் தேதி திடீர் புரட்சியின் மூலம் நாடாளுமன்றத்துக்குள்நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றினர்.
மகேந்திர சவுத்ரி உள்பட பலரை அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டனர். அதன்பிறகு பிஜியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ராணுவத்திடம் ஆட்சிவந்தது.
பிஜியில் பிஜி நாட்டவர்களைக் கொண்டு புதிய இடைக்கால அரசு அமைக்கவேண்டும்என்று புரட்சிப்படையினர் கோரிக்கை விடுத்தனர்.
அக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து கடைசியாக பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த மகேந்திர சவுத்ரி உள்பட அனைவரும்விடுவிக்கப்பட்டனர்.
சில நாட்களுக்குப் பிறகு முன்னாள் அதிபரும் ஜார்ஜ் ஸ்பீட்டின் ஆதரவாளருமானஇலாய்லோ தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. இலாய்லோ மட்டும்பதவியேற்றுக் கொண்டார்.
ஆனால், அமைச்சரவையில் தனது ஆதரவாளர்கள் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளப்படாததை அடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு ஜார்ஜ் ஸ்பீட்எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து அமைச்சரவை பதவியேற்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் விடி லேவு தீவில் தனிஆட்சி அமைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் மகேந்திர சவுத்ரி ஈடுபட்டுள்ளார்.
தனது தலைமையில் மக்கள் கூட்டணிக் கட்சிஆட்சி அமைய உலக நாடுகளின்உதவியை அவர் கோரியுள்ளார். இது தொடர்பாக, பல வெளிநாட்டுத்தலைவர்களுடன் அவர் பேசி வருகிறார்.
இந் நிலையில், புதிய ஆட்சியின் செயல்பாட்டுக்கு வெளிநாடுகளிடமிருந்து நிதிதிரட்டும் நடவடிக்கையில் மகேந்திர சவுத்ரி ஈடுபட்டுள்ளார்.
இதற்காக அவரது பிரதிநிதிகள் பலர் பல வெளிநாடுகளுக்குச் சென்று அந்தநாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்னர்.
பிஜியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் அமைதியற்றசூழ்நிலை நிலவுகிறது.
பாதுகாப்பின்மை காரணமாக உயிருக்குப் பயந்து பல இந்திய வம்சாவளிக்குடும்பங்கள் தவிர பிஜி நாட்டைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றபடிஉள்ளனர்.
தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்துவோம்என்று ஜார்ஜ் ஸ்பீட்டின் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளது நிலைமையை மேலும்சிக்கலாக்கியுள்ளது.
இதற்கிடையே, புதிய அதிபராக பதவியேற்றுள்ள இலாய்லோவுக்கு தொலைபேசியில்கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அவரது பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications