தமிழகத்தில் இன்று
"முஷாரஃப் ஆட்சியில் இருக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை"
சென்னை:
பாகிஸ்தானில் முஷாரஃப் ஆட்சியில் இருக்கும்வரை அந் நாட்டுடன் பேச்சுநடத்தப்படாது என்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அஜீத் குமார்பாஞ்சா தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் நாடு இப்போது தலைமை நிர்வாக அதிகாரி தலைமையில் ஒரு கம்பெனிபோல் இயங்குகிறது.
இரு தரப்பு பேச்சுவார்த்தையிலும் காஷ்மீர் பிரச்னையை கிளப்ப முஷாரஃப் விரும்பும்வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை.
அது மட்டுமல்ல, கார்கில் நடவடிக்கைக்கு முக்கிய காரணமே முஷாரஃப்தான்.
பாகிஸ்தானில் யாருடன் பேச்சு நடத்துவது, என்ன பேசுவது என்று தெரியவில்லை.ஏனெனில் முஷாரஃப்பின் கைகள் ரத்தக் கறை படிந்துள்ளன. அவருடன் ஒருபோதும்இந்தியா கைகுலுக்காது.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் நிலை நீர்த்துப் போய்விட்டது என்றுகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நட்வர் சிங் கூறியுள்ளது தவறு.
இந்தியாவின் நிலையில் எந்த மாற்றம் இல்லை. இலங்கையில் பிற நாட்டின் ராணுவதலையீடு கூடாது என்று இந்தியா உறுதியாக உள்ளது.
இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பிய ராஜீவ்காந்தி அமைச்சரவையிலும் நான்மந்திரியாக இருந்தேன். இப்போது வாஜ்பாய் அமைச்சரவையிலும் மந்திரியாகஇருக்கிறேன்.
எனவே நாணயத்தின் இரண்டு பக்கமும் எனக்குத் தெரியும் என்றார் பாஞ்சா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications