தமிழகத்தில் இன்று
"எங்களுக்கு அமைச்சர் பதவியே வேண்டாம்", சொல்கிறார் ராமதாஸ்
புதுவை:
தமிழகத்தில் எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் அதை ஏற்கமாட்டோம் என்று பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் ராமதாஸ் கூறினார்.
புதுவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அமைச்சரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிஏற்படவேண்டும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தாது. மேலும், அமைச்சர் பதவி கொடுப்பதாகஅழைப்பு விடுக்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் இருக்கும். புதுவையில் கடந்த ஆண்டுகளில் பலஆட்சிகள் அமைந்துள்ளன. 2001-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு புதுவையில் பாட்டாளி மக்கள் கட்சிதான்அமையும்.
எனது மகன் அன்புமணியை புதுவை முதல்வராக்க நான் முயற்சி மேற்கொண்டுள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திவெளியாகியுள்ளன. இது முழுவதும் தவறான செய்தியாகும். இச் செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகள் மீதுசட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கலவரத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புதான் முழு காரணம்.அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்போது ஆதாரங்களை நான்வெளியிடுவேன்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 73 சதவீத இட ஒதுக்கீட்டை புதுவை அரசு உடனேஅமல்படுத்தவேண்டும்என்றார் ராமதாஸ்.
முன்னதாக, ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் புதுவை சட்டப்பேரவை நோக்கிஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை நிலை ஆளுநர் ரஜனிராயிடம் சமர்ப்பித்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications