தமிழகத்தில் இன்று
ராணுவத்தில் நுழையும் பங்களாதேஷ் பெண்கள்
டாக்கா:
ராணுவத்தில் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று பங்களாதேஷ் அரசு அறிவித்ததுதான் தாமதம்.
நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் டாக்காவில் உள்ள ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு அலுவலகம் முன் நீண்டவரிசையில் நிற்கத் தொடங்கிவிட்டனர்.
முஸ்லிம் நாடான பங்களாதேஷில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே செல்வதென்றால் பர்தாஅணிந்துதான் செல்லவேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்களுக்கு அரசாங்கத்தில் வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன.
ஆனால், பெண்கள் இயக்கங்கள் மேற்கொண்ட போராட்டங்களின் பலனாக, அரசுப் பணிகளில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதன் அடுத்தகட்டநடவடிக்கையாக கடுமையான ராணுவப் பணியிலும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து ராணுவ பிரிகேடியர் இஷாக் இப்ராஹிம் கூறியதாவது:
ராணுவத்தில் 2000 பெண்களைத் தேர்வு செய்ய உள்ளோம். காலாட் பிரிவு மற்றும் துப்பாக்கிப் பிரிவுகளில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.பின்னர் படிப்படியாக, போர் முனையிலும் பெண்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
பங்களாதேஷ் ராணுவத்தில் மருத்துவப் பிரிவில் மட்டுமே சில பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இப்போதுதான் முறையான ராணுவப் பணியில் பெண்கள்சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
முதற்கட்டமாக 30 இளநிலை அதிகாரிகள் பதவிக்குப் பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டாம் கட்டத் தேர்வு பின்னர் நடைபெறும்.தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு வழக்கமான ராணுவ சீருடை வழங்கப்படும் என்றார் இப்ராஹிம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications