தமிழகத்தில் இன்று
பங்களாதேஷ் பிரதமரைக் கொல்ல குண்டு வைத்த 3 பேர் கைது
டாக்கா:
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை வெடிகுண்டு வைத்துக் கொல்ல முயன்ற 3 பேரை அந் நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து கோபால்கன்ஜ் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் முகம்மது ஜாசிமுதீன் கூறியதாவது:
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கோடலிபாரா என்ற இடத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் சனிக்கிழமை பேசஉள்ளார்.
கூட்டத்துக்கு வரும் பிரதமரைக் கொல்ல 76 கிலோ எடையுள்ள வெடிகுண்டை கூட்டம் நடக்கும் இடத்தில் வைக்க 3 பேர் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகதகவல் கிடைத்தது.
உடனே தீவிர விசாரணை மேற்கொண்டதில் கூட்டம் நடக்கும் இடத்துக்கு வெகு அருகில் குண்டு வைத்திருந்த சிப்பிர் அகமத், ஜகாங்கீர் உசேன்,ஃபரீத்துஸ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டு, செயலிழப்பு செய்யப்பட்டது. பிடிபட்ட மூன்று பேரும் கோபால்கஞ்ச் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
இச் சம்பவத்தை அடுத்து பிரதமர் பேச உள்ள கோபால்கஞ்ச் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார் ஜாசிமுதீன்.
பொதுக்கூட்டம் நடைபெற இருந்த இடத்துக்கு அருகிலிருந்து வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது குறித்து ஹசீனாவிடம் கூறியதற்கு, "நான் சாவைப் பற்றிபயப்படவில்லை. எது வருவதாக இருந்தாலும், அது வந்தே தீரும். எல்லாம் கடவுளின் கையில்தான் உள்ளது" என்றார்.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications