தமிழகத்தில் இன்று
உயிருக்கும் ... கயிறுக்கும் இடையே ஒரு ஊசலாட்டம்
கோவை:
மீண்டும் ஒருமுறை தூக்குக் கயிற்றிலிருந்து தப்பியுள்ளார் நிலத்தகராறில் 5 பேரைக்கொன்ற கோவை விவசாயி கோவிந்தசாமி.
இவருக்கு கருணை காட்ட தற்போது பல்வேறு அமைப்புகள் முதல்வர் கருணாநிதி,உள்துறை அமைச்சகம் மற்றும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளன. தூக்குத்தண்டனையிலிருந்து இந்த விவசாயி தப்புவாரா என்பது இன்னும்கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகேயுள்ள கொண்டையம்பாளையம்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி (37). இவருக்கும் இவரது உறவினர்நாகமலைக் கவுண்டருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று நாகமலைக் கவுண்டர் அவரது மனைவி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள்ஆகிய 5 பேரும் இரவில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது கோவிந்தசாமி அங்கு சென்று 5 பேரையும் அரிவாளால் வெட்டிக் கொலைசெய்தார்.
ஈரோடு மாவட்டத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில்,குற்றம் நீரூபிக்கப்படாததால், இவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அரசு, இந்தவழக்கை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததது.
உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் கோவிந்தசாமிக்கு தூக்குத் தண்டனை விதித்துதீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த தண்டனையை நிறைவேற்றநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கோவிந்தசாமி ஜனாதிபதிக்குஅனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
பின்னர், கோவிந்தசாமி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் முதல்வர்ஆகியோருக்கு கருணை மனு அனுப்பினார். மனுவை உள்துறை அமைச்சகம், ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தண்டனை நிறைவேற்றுவதை ஒத்தி வைத்து பரிசீலனைசெய்தது.
பின்னர் ஜூலை 14ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மரண தண்டனைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளகிருஷ்ணய்யர், கோவிந்தசாமியின் மனுவை மீண்டும் பரிசீலனை
செய்யுமாறு முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று உள்துறை அமைச்சகம் மீண்டும் தண்டனையை ஜூலை23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. தற்போது இந்த தண்டனை மீண்டும் ஆகஸ்ட் 7ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த தொழிலாளர் அமைப்பு, விவசாயிகள் நில அமைப்பு,மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் ஈரோடு விவசாயிக்கு கருணைகாட்ட வேண்டும் என முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு மனுஅனுப்பியுள்ளனர்.
கோவிந்தசாமிக்குக் கருணை காட்டுவதும், நிராகரிப்பதும் அரசின் கையில் உள்ளது.ஆனால், உயிரோடு வாழ்வோமா, மாட்டோமா என்ற பரிதாபத்தில் இந்த விவசாயிசிறையில் தவித்து வருவது பரிதாபத்திற்குரியது தான்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications