தமிழகத்தில் இன்று
செய்தது குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்...போனது கை
கோவை:
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கை மீண்டும் ஒரு அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது.
ஊட்டி அருகே உள்ள தலைக்குந்தா என்ற இடத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி வள்ளி, கோவையில் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்டார். குழந்தை பிறந்த பிறகு அவருக்கு குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பின்னர் வீட்டுக்குச் சென்ற வள்ளியின் வலது கை திடீரென்று உணர்ச்சியற்றுப் போனது. இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார்.
கையைப் பரிசோதித்த டாக்டர்கள், கையில் ரத்த ஓட்டம் குறைந்து விட்டது. எனவே அறுவை சிகிச்சை மூலம் கையை அகற்ற வேண்டும்.இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் எனக் கூறிவிட்டனர்.
இதையடுத்து வள்ளியிடம் எழுதி வாங்கிக் கொண்டு, அறுவை சிகிச்சை செய்து கையின் முன் பகுதியை எடுத்து விட்டனர். இக் கை பரிசோதனைக்குஅனுப்பப்பட்டுள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையில் ஏற்பட்ட கோளாறால் கை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச் சம்பவம்பற்றி கருத்து தெரிவிக்க மருத்துவமனை டீன் சுப்பிரமணியம் மறுத்துவிட்டார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications