தமிழகத்தில் இன்று
ராப்ரியை வெட்கப்படுத்திய "நாம் இருவர், நமக்கு இருவர்"
பாட்னா:
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்பான கூட்டத்தில் மாநாட்டில் கலந்துகொள்ள பிகார் முதல்வர் ராப்ரி தேவி கலந்து கொள்ளவில்லை.
தேசிய மக்கள் தொகை கமிஷன் சார்பில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து நடத்தப்பட்ட இம் மாநாட்டில் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
ஆனால், ராப்ரி தேவி கலந்து கொள்ளவில்லை. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற இம் மாநாட்டில் "நாம் இருவர்,நமக்கு இருவர்" என்ற குடும்பக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றாத தாம் இம் மாநாட்டில் கலந்து கொள்ள தகுதி இல்லை என்ற எண்ணத்தில்அவர் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார் ராப்ரி தேவி.
ஏனெனில் அவருக்கு 9 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம் மாநாட்டில் கலந்து கொண்டால் தர்மசங்கடமான நிலை ஏற்படலாம்என்று கருதியே மாநாட்டில் கலந்து கொள்வதை அவர் தவிர்த்து விட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாகவே இத்தகைய மாநாட்டில் கலந்து கொள்வதை ராப்ரி தேவி தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிகார் முதல்வராகஇருந்தபோது லல்லு பிரசாத் யாதவுக்கே இத்தகைய தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.
பிகார் சட்டப்பேரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பான விவாதத்தில் இத்தகைய தர்மசங்கடத்தை லல்லு பிரசாத் யாதவ் சந்திக்கநேரிட்டது. ஆனால், தனது சமயோஜிதமான பதில்களால் அதைச் சமர்த்தியமாகத் தவிர்த்துவிட்டார்.
ஆனால், அத்தகைய புத்தி சாதுர்யமோ, சகஜமாக பேசும் திறனோ ராப்ரி தேவிக்கு இல்லை. இதனாலேயே டெல்லி மாநாட்டில் கலந்து கொள்ளாமல்அவர் தவிர்த்து விட்டார். அவருக்குப் பதிலாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சக்கீல் அகமது கலந்து கொண்டார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications