தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் ரெய்டு: தெ.ஆப்பிரிக்கா மவுனம்

ஜொகான்னஸ்பர்க்:

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலருடைய வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை தொடர்பாக கருத்து தெரிவிக்க தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியமும், கிங் விசாரணைக் கமிஷனும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

கடந்த ஆண்டு இந்தியாவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஹான்சி குரோனியே பிடிபட்டார்.

இதையடுத்து அவர் மீது கிங் விசாரணைக் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

ஹான்சி குரோனியே பிடிபட்ட பிறகு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் பலபுகார்கள் கூறப்பட்டன.

4 ஆண்டுகளுக்கு முன் தனக்கு ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக கபில் தேவ் மீது மனோஜ் பிரபாகர் குற்றம் சாட்டினார். குரோனியே மீதுகுற்றச்சாட்டு எழுந்ததற்குப் பிறகு மனோஜ் பிரபாகரின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது.

இதையடுத்து அவரது குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில்ஈடுபட்டு லட்சக்கணக்கான ரூபாய் லட்சம் பெற்றதாக முக்கிய தகவல்கள் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து கபில்தேவ், அசாருதீன், ஜடேஜா, மோங்கியா, சித்து, டால்மியா மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் வீடுகளில்வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களும், கணக்கில் காட்டப்படாத லட்சக்கணக்கான ரூபாய்களும், பல அடுக்குமாடி வீடுகளுக்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், அவற்றின் முழு விவரங்களையும் தெரிவிக்க வருமான வரித் துறை அதிகாரிகள்மறுத்துவிட்டனர்.

இந் நிலையில், கிரிக்கெட் வீரர்களின் வீடுகளில் நடந்த திடீர் சோதனை குறித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், குரோனியே மீதானகுற்றச்சாட்டை விசாரித்து வரும் கிங் கமிஷனும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கிங் கமிஷனின் நடவடிக்கையைத் தொடர்ந்துதான் கிரிக்கெட் சூதாட்டம் பற்றிகுற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் பெற்று இப்போது இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை என்ற நிலைக்குச்சென்றுள்ளது.

அப்படியிருக்கும்போது தொடர்ந்து இரு நாட்கள் நடந்த இச் சோதனை பற்றி அவை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது ஆச்சியரியமாக உள்ளது.

கிரிக்கெட் சூதாட்டம் பற்றி இன்னும் விசாரணை முடியாத நிலையில், இந்தியாவில் நடந்த சோதனை பற்றி கருத்து தெரிவிக்க இது சரியான தருணமல்லஎன்றார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் பிரான்வின் வில்கின்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்துள்ள சோதனையானது, கிங் கமிஷனின் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டது. ஆகவே அது பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்று கிங்கமிஷனின் செய்தித் தொடர்பாளர் ஜான் பகான் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+