தமிழகத்தில் இன்று
"இன்டர்நெட்டில் இல்லாத மொழிகள் அழியும்
சிங்கப்பூர்:இன்டர்நெட்டில் இல்லாத மொழிகள் எதிர்காலத்தில் அழிந்து விடும் என்றுசிங்கப்பூரில் சனிக்கிழமை துவங்கிய தமிழ் இன்டர்நெட்-2000 மாநாட்டில்தெரிவிக்கப்பட்டது.மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரண்டு நாள் மாநாட்டைசிங்கப்பூர் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஜார்ஜ் இயோ துவக்கி வைத்துப்பேசியதாவது:
தமிழ் மொழி உலகம் முழுவதிலுமுள்ள 65 மில்லியன் மக்களை தினசரிசென்றடைகிறது. பொருளாதார அடிப்படையில் வலுவாக இல்லாவிட்டால், மிகச்சிறிய குழுவுக்குச் சொந்தமான ஒரு மொழியாக மட்டுமே தமிழ் மாறக் கூடியஅபாயமும் உள்ளது.
வாடிக்கையாளர் நிர்வாகம், பொருள் விநியோகம், திட்டமிடுதல் ஆகியவை தாய்மொழியிலேயே இருக்க வேண்டும். ஈ காமர்ஸ், தாய் மொழியிலேயே நடக்கவேண்டும்.
முன்பு இன்டர்நெட் உலகை ஆங்கிலம் ஆட்சி புரிந்து வந்தது. இது பலரைக்கவலைப்படுத்தியது. இப்போது அந்தப் பயம் போய் விட்டது. குறிப்பாகதமிழர்களுக்கு இந்தப் பயம் முற்றிலும் அகன்று விட்டது எனலாம். இன்டர்நெட்உலகில் காலடி வைத்த முதல் மொழிகளில் ஒன்று தமிழ்.
இன்டர்நெட்டின் 70 சதவீத ஆளுமை, ஆசிய மொழிகளின் கையில்தான் உள்ளது.தமிழ் தவிர, மாண்டரின், ஜப்பானிஸ், வியட்நாமிஸ், கொரியன், ஹிந்தி, தகலாக், தாய்ஆகிய மொழிகள் இன்டர்நெட்டில் வெற்றிகரமான மொழிகளாக உள்ளன.
1995-ல் சில நூறு இன்டர்நெட் தளங்களே தமிழில் இருந்தன. இன்று அது 2.50 லட்சம்தளங்களாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
இந்த மாநாட்டில், இந்தியா, இலங்கை, மலேசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியநாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications