தமிழகத்தில் இன்று
தமிழகத்தில் மேலும் 4 வாரியங்கள்
சென்னை:
தமிழக அரசின் சார்பில் தையல் தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், முடிதிருத்துவோர்கள், சலவைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கென புதிதாக நான்குவாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வாரியங்கள் அமைப்பது குறித்து இவ்வாண்டுக்கான பட்ஜெட் உரையில்,முதல்வர் கருணாநிதி, அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு தையல் தொழிலாளர்நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு முடிதிருத்துவோர் நல வாரியம், தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் நலவாரியம் ஆகிய நான்கு வாரியங்களை அமைத்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
அமைப்புச் சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைபாதுகாப்பதற்கு வழிவகுக்கும் வண்ணம் இந்த நான்கு தொழிலாளர் நலவாரியங்களையும், புதிதாக அமைந்துள்ளமைக்காக இத்தொழில்கள் தொடர்புடையபல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும்,புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளஉறுப்பினர்களும், முதல்வர் கருணாநிதியை சனிக் கிழமை கோட்டையில் சந்தித்துநன்றி தெரிவித்தனர்.
நான்கு வாரியங்களுக்கும் தலைவராக தொழிலாளர் நலத் துறை அமைச்சர்ரகுமான்கான் இருப்பார். நிர்வாகத்தின் சார்பில் 9 பேரும், தொழிலாளர்கள் சார்பில் 9பேரும், அரசு சார்பில் 9 பேரும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
அமைப்புச் சாரா தொழிலாளர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 88 பேர் தங்களை பதிவுசெய்து கொண்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கடந்த ஜனவரியில் இருந்து ஒருகோடியே 68 லட்சத்து 69 ஆயிரத்து 310 ரூபாய் சந்தாத் தொகைவசூலிக்கப்பட்டுள்ளது.
வாரியங்களில் உறுப்பினராக இருக்கும் தொழிலாளர்கள் இறந்தால் வழங்கப்படும்உதவித் தொகை 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுஎன்று அமைச்சர் ரகுமான்கான் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications