தமிழகத்தில் இன்று
எம்.ஜி.ஆர் விசுவாசிகளை இழுப்பாரா திருநாவுக்கரசு?
சென்னை:
அதிமுகவில் உள்ள எம்.ஜி.ஆர். விசுவாசிகள், அதிருப்தித் தலைவர்களை பா.ஜ.க. அணிக்கு இழுப்பது தொடர்பாக பிரதமர் வாஜ்பாயை, எம்.ஜி.ஆர்அ.தி.மு.க பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் பற்றி இரு தலைவர்களும் பேசினார்கள். தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பற்றியும் மிக ஆர்வமாககேட்டுக்கொண்டாராம் வாஜ்பாய்.
அ.தி.மு.க இப்பொழுது மாறிவிட்டது. உண்மையான எம்.ஜி.ஆர் தொண்டர்களும் விசுவாசிகளும் அ.தி.மு.கவில் இல்லை என்று வருத்தப்பட்டுச் சொன்னதிருநாவுக்கரசு, அ.தி.முகவில் இருந்து விலகிய பலர் இன்று தனித்தனியாக இருக்கிறார்கள் என்றும் பிரதமரிடம் கூறினார்.
அவர்களையெல்லாம் ஒன்றிணைத்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவில் இணைத்து சிறப்பாக செயல்படலாம். தி.மு.க , பா.ஜ.க கூட்டணியிலேயே செயல்பட்டால்சிறப்பாக இருக்கும் என்று தன்னுடைய புதிய வியூகத்தைச் சொன்னாராம் திருநாவுக்கரசு.
வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் ஜெயலலிதாவை வெற்றிபெற விட்டு விடக்கூடாது என்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார் திருநாவுக்கரசு.பிரதமரும் யார் யார் இருக்கிறார்கள் அவர்களுடைய செல்வாக்கு பற்றியும் விசாரித்தவர், எம்.ஜி.ஆர் பற்றியும் பெருமையாக பேசினாராம்.
எம்.ஜி.ஆருடைய தொண்டர்கள், விசுவாசிகள் இன்று சிதறி இருப்பது எனக்கும் வருத்தமான விஷயம் தான். உற்சாகமாக செயல்படுங்கள் என்றுவாழ்த்துக்கள் கூறி திருநாவுக்கரசை அனுப்பினாராம் வாஜ்பாய்.
விரைவில் எம்.ஜி.ஆர் தொண்டர்களை, விசுவாசிகளை புது உற்சாகத்துடன் ஒருங்கிணைக்கும் பணியில் திருநாவுக்கரசு செயல்பட ஆரம்பிப்பார் என்கிறார்கள்தமிழக அரசியல் களத்தில்.


Click it and Unblock the Notifications
