தமிழகத்தில் இன்று
திருவண்ணாாமலையில் ஆடிப்பூர விழா
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ஆடிப்பூர விழா 24-ம் தேதிகொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்க இருக்கிறது.
திருவண்ணாமலையில் உள்ளது அருணாசலேஸ்வரர் கோயில். சிவபெருமானுக்குள்அடக்கமான, பஞ்ச பூதங்களான நீர், நிலம் ,காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியஒவ்வொன்றையும் ஒவ்வொரு திருத்தலத்தில் ஆண்டு வருகிறார். இதில் நெருப்புக்குவிசேஷமானது திருவண்ணாமலைை. இஙகுள்ள சிவபெருமான் அருணாசலேஸ்வரர்என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இங்கு கார்த்திகை தீப விழா சிறப்பாகநடைபெறும்.
ஆடி மாதம் அம்மனுக்கு சிறப்பானதாகும். ஆடி மாதத்தில் வரும் ஆடி வெள்ளி, ஆடிஅமாவாசை. ஆடிப் பூரம் போன்ற நாட்களில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடப்பதுஇங்கு தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.
அதன்படி இந்த வருடத்திற்கான ஆடிப்பூர விழா 24.ம் தேதி திங்கள் கிழமையன்றுகொடியேற்றத்துடன் துவங்குகின்றது. இந்த சமயத்தில் விசேஷ அபிஷேகங்கள் மற்றும்சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


Click it and Unblock the Notifications
