தமிழகத்தில் இன்று
போலீஸ் சித்ரவதை செய்ததாகக் கூறுகிறார் "கராத்தே ஹூசைனி
சென்னை:
போலீசார் என்னை அடித்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தினார்கள். குடிப்பதற்கு சிறுநீர் கொடுத்தார்கள். என் மீது பொய்வழக்குப் போட்டனர் என்றுபோலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ள கராத்தே வீரர் ஹூசைனி கூறியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த கராத்தே வீரர் ஹூசைனி, அவர் நடத்தி வரும் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சரியான சம்பளம்கொடுக்கவில்லை. அடித்து துன்புறுத்தினார் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னையில், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், முதல்வன் படம் மதுரையில் கேபிள் டிவியில் திருட்டுத்தனமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதில் தலையிட்டு பலரை கைது செய்ய உதவினேன். இதனால் பாதிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகரால் இப்போதுபழிவாங்கப்படுகிறேன்.
அவரது தூண்டுதலின் பேரில், என் மீது அடுக்கடுக்காக பொய் வழக்குகள் போடப்படுகின்றன. நான் நடத்தி வரும் ஹைப்ரோஃபைல் என்ற திருட்டு சி.டி.தடுப்பு அமைப்பை அழிக்க சதி நடக்கிறது.
ஜீன்ஸ் படத்தின் திருட்டு சிடி தொடர்பாக எனது அலுவலகத்தில் வேலை செய்யும் மலர்மன்னன் என்பவருடன் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்துப் பேசினேன்.அப்போது ஒரு உயர் அதிகாரி என்னிடம் ஆசைத்தம்பியை சுட்டுக்கொன்றது போல் உன்னையும் சுட்டுக்கொன்று விடுவேன் என்றார்.
அதற்குப்பின் மத்திய அரசால் எனக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால் தீவிரவாதிகளிடம் இருந்து எனதுஉயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் நிலை வந்தது.
பல புதிய திரைப்படங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி பல தயாரிப்பாளர்கள் என்னிடம் கேட்டனர். இதை பலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தற்போது பொய்வழக்குப் போட்டு என்னைக் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
காவல்நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் ஒரு இன்ஸ்பெக்டர் என்னிடம் வந்து நான் போட்டிருந்த உடைகளை கழற்றி விட்டு பூட்ஸ் காலால் எட்டிஉதைத்தார். லத்தியால் அடித்ததால் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.
அந்த அதிகாரி தாக்கியதில் நான் ரத்தம் கக்கினேன். குடிக்கத் தண்ணீர் கேட்டபோது, இன்ஸ்பெக்டர் எனக்கு சிறுநீரைக் கொடுத்தார்.
கமிஷனருக்கும், அரசியல் தலைவர்களுக்கும் சவால் விடுகிறாயா, கொன்று விடுவோம், குண்டர் சட்டத்தில் அடைத்து விடுவோம். பல வழக்குகள்போட்டு வாழ்க்கை முழுவதும் உள்ளே தள்ளி விடுவோம் என்று என்னை மிரட்டினார்.
எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விளக்கி, இந்திய மனித உரிமை கமிஷன், தமிழக மனித உரிமை கமிஷன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிஆகியோர்களுக்கு மனுக்கள் அனுப்பி இருக்கிறேன்.
நானும், எனது மாணவர்களும் பல்வேறு சர்வதேச கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு 40 க்கும் மேற்பட்ட கோப்பைகளை வென்றுள்ளோம்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications