தமிழகத்தில் இன்று
பதவி விலகினார் ராம்ஜெத்மலானி
டெல்லி:
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ராம் ஜெத்மலானி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை, குடியரசுத் தலைவர்கே.ஆர்.நாராயணன் ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அமைச்சர் ராம் ஜெத்மலானியின் ராஜினாமாவை ஏற்குமாறு பிரதமர் வாஜ்பாய், குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்திருந்தார். இதை ஏற்று,ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
சனிக்கிழமை மாலை தனது ராஜினாமா கடிதத்தை ஜெத்மலானி, பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பியிருந்தார். இதை குடியரசுத் தலைவருக்கு வாஜ்பாய்உடனடியாக அனுப்பி வைத்திருந்தார்.
ஏன் ராஜினாமா?
1992-93ம் ஆண்டு மும்பையில் நடந்த கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா விசாரணைக் கமிஷன் அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்பொது நலன் கருதி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தெரிவித்திருந்த குறிப்பு குறித்து ராம் ஜெத்மலானி கருத்துத் தெரிவித்திருந்தார்.இதற்கு நீதிபதி ஆனந்த் கடும் கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசுக்குத் தெரிந்துதான் இந்தக் கருத்தை ஜெத்மலானி வெளியிட்டிருந்தாரா என்று அவர்கடுமையாக கேட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், புனேயிலிருந்து தனது ராஜினாமாக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தார் ஜெத்மலானி.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications