தமிழகத்தில் இன்று
முரளிதரன் சூறாவளியில் சின்னாபின்னமான தெ.ஆப்பிரிக்கா
காலே (இலங்கை):
இலங்கை அணிக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே காலே நகரில் நடந்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 15 ரன்கள்வித்தியாசத்தில், இலங்கை வெற்றி பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த நான்காவது நாள்ஆட்டத்தில், இலங்கை வெற்றி வாகை சூடியது. முதலில் ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில், 522ரன்களைக் குவித்திருந்தது. ஜெயவர்த்தனே 167 ரன்களும், கேப்டன் ஜெயசூர்யா 148 ரன்களும் விளாசியிருந்தனர். அட்டப்பட்டு 54 ரன்களும், வாஸ் 54ரன்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை 238 ரன்களுக்கு இழந்து பாலோ ஆன் பெற்றது. கல்லினன் 114 ரன்கள் எடுத்ததேகுறிப்பிடத்தக்க விஷயமாகும். தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா பரிதாபமாக ஆடியது.
சனிக்கிழமை ஆட்ட நேர இறுதியில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.இருப்பினும் பிற்பகலுக்கு மேல் வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை. இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களுக்கு போட்டியைஇழந்தது தென் ஆப்பிரிக்கா.
ஜான்டி ரோட்ஸ் சிறப்பாக ஆடி 63 ரன்கள் சேர்த்து கிர்ஸ்டன் 55 ரன்களும், கல்லிஸ் 40 ரன்களும் எடுத்தனர். போயே 35 ரன்கள் சேர்த்தார்.
முரளிதரன் அபாரமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார். சந்தனாவுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன.
மொத்தம் மூன்று போட்டிகள் கொண்டஇந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை இப்போது முன்னணியில் உள்ளது.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications