தமிழகத்தில் இன்று
வன்முறை ஒழிய வேண்டுமா?...யோசனை கூறுகிறார் வாழப்பாடி
பாண்டிச்சேரி:
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின்முக்கியத் தலைவர்களான திருமாவளவன் மற்றும் குரு ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.
பாண்டிச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் ஒற்றுமையையும், பாதுகாப்பையும் சீர்குலைக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. அதனால் அக்கட்சியில் உள்ளமத்திய அமைச்சர்கள் அனைவரையும் கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும்.
பதவி ஆசையில் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எனக்குப் பல விதங்களில்பிரச்சனைகளைக் கொடுத்து வருகிறார். அவர் பாட்டாளி மக்கள் கட்சியைக் கலைத்து விட்டு வன்னியர் சமூக மக்களின் நலனிற்காகத் நான்தொடங்கவிருக்கும் வன்னியர் கட்சிக்கு ஆதரவளித்தால், அதை நான் வரவேற்பேன்.
பாண்டிச்சேரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்காக 73 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன்.
பாண்டிச்சேரியில் ஒரேமாதிரியான விற்பனை வரி முறையை அமல்படுத்தினால் அது மாநிலத்தின் பொருளாதாரத்தை பாதிப்பதுடன் வேலையில்லாத்திண்டாட்டத்தையும் ஏற்படுத்தும் என்றார்.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications