தமிழகத்தில் இன்று
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது பிடியை இறுக்குகிறது சவூதி அரசு
துபாய்:
சவூதி அரேபியாவில் முறையான அனுமதியில்லாமல் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீதான பிடியை சவூதி அரசு இறுக்கியுள்ளது.
இவர்களை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் சவூதி அரேபிய உயர் அதிகாரிகள் ஆகஸ்ட் 30 முதல் ஈடுபடுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதிஅரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரம்:
உலகத்திலேயே சிறந்த எண்ணெய் வளமிக்க நாடு சவுதிஅரேபியா. இங்கு வாழும் மக்கள் தொகையில் 47 சதவீதம் பேர் வெளிநாட்டினர். அதாவதுவெளிநாட்டிலிருந்து சவுதிஅரேபியாவுக்கு வந்து வேலை செய்யும் மக்கள் 72 லட்சம் பேருக்கும் மேல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் போலி தஸ்தாவேஜூகள் மூலம் இங்கு வந்தவர்கள். மேலும் இங்கு வரும்போது பாஸ்போர்ட் மற்றும் பிறதஸ்தாவேஜூகளில் ஒரு வேலைக்கு வருவதாகச் சொல்லிவிட்டு இங்கு வந்து வேறு வேலை செய்கிறார்கள்.
இவர்களால் சவூதி அரேபிய மக்களின் வேலையில்லாத் திண்டாட்டம் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரசு அனுமதியின்றி இங்கு வந்து வேலை செய்பவர்களைஅடையாளம் கண்டறிந்து அவர்களை அவர்களது நாட்டிற்கே அனுப்பும் முயற்சியில் சவூதிஅரேபியா உயர்அதிகாரிகள் ஏற்கனவே ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தத் தொழிலாளர்களை இனம்கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதுவரை 3,50,000 பேர் அடையாளம்கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு அபராதம் விதித்து சம்பந்தப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசுஅறிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications