தமிழகத்தில் இன்று
மார்ச்சில் வருகிறது சட்டசபைத் தேர்தல்
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு கடந்த 1996 ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தது. அப்போது தி.மு.க, த.மா.கா, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டு வெற்றிபெற்றன. தற்போதைய திமுக அரசின் பதவிக்காலம், 2001 ம் ஆண்டு மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
தமிழக சட்டசபைக்கு எப்போது தேர்தல் வரும் என்ற பேச்சு நீண்ட நாட்களுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. இந்த நிலையில், சென்னை வந்திருந்ததேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இயந்திரம் மூலம் ஓட்டுப்போடும் முறை கட்டாயமாக்கப்படும். தமிழகத்தில் இயந்திரம் மூலம்தான் ஓட்டுப்பதிவு நடக்கும்.
சென்னை, சேலம், ஈரோடு, வேலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இன்டர்நெட்மூலம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை இன்டர்நெட் மூலம் விநியோகிக்கும் முறையை அறிமுகப்படுத்த நான் தமிழகம் வந்துள்ளேன்.இதற்கான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடக்கும். அதில் கலந்து கொள்கிறேன் என்றார்.
சென்னை வந்துள்ள தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து போட்டோவுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்குவதுதொடர்பாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை ராயபுரம் சட்டசபை தொகுதிக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை 25-ம் தேதி தேர்தல் கமிஷனர் துவக்கி வைக்கிறார். காஞ்சிபுரம்மாவட்டத்தில் அச்சிறுபாக்கம் சட்டசபை தொகுதிக்கான அடையாள அட்டைகள் வழங்கும் பணியையும் 26-ம் தேதி அவர் தொடங்கி வைக்கிறார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications