தமிழகத்தில் இன்று
மரத்தடியில் படுத்துத் தூங்கிய காமராஜர்
சென்னை:
தனக்கு ஒதுக்கப்பட்ட அறை சரியாக இல்லாதபோதும், அதை பெரிதுபடுத்தாது, மரத்தடியில் படுத்துத் தூங்கியவர் காமராஜர் என்று தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர் மூப்பனார் கூறினார்.
வடசென்னை த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்ததின விழா தங்கசாலை மணிக்கூண்டு அருகே கொண்டாடப்பட்டது. அதில் மூப்பனார் பேசுகையில்,
தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி பொற்காலமாக விளங்கியது. மக்களுக்காக இரவு பகலாக உழைத்தவர் காமராஜர். எளிமையின் சின்னமாகத்திகழ்ந்தவர் அவர்.
பசுமைப் புரட்சி, தண்ணீர் புரட்சி, தொழில்புரட்சி என்று பல்வேறு புரட்சிகள் செய்தவர் காமராஜர். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு முறைகும்பகோணத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு அவருக்காக ஓதுக்கப்பட்ட அறையில் அவரால் தூங்க முடியவில்லை. உடனடியாக அவர் கட்டிலைவெளியே கொண்டு வந்து அங்கிருந்த மரத்தின் அடியில் போட்டில் படுத்துத் தூங்கினார்.
அவரைப் போல் தற்போதுள்ள முதல்வர்கள் தூங்க முடியுமா? தற்போது முதல்வர்கள் தங்கள் வீட்டு வராண்டாவில் நிற்பதற்குக் கூட பலத்த பாதுகாப்புதேவைப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி கண்ணைத் திறந்தவர் காமராஜர். பசியால் வாடும் ஏழை மக்களுக்காக மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர்காமராஜர். ஆனால் தற்போது இன்ஜினியரிங், மெடிக்கல் என்று ஒவ்வொரு படிப்பிற்கும் 20 லட்சம், 30 லட்சம் என்று ரூபாய் நோட்டுக்களை அள்ளிவிடவேண்டியிருக்கிறது. இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது?
தி.மு.க.வை விட்டு த.மா.கா. விலகவில்லை. தி.மு.க.தான் புதுமனைவி (பாரதீய ஜனதா) வந்ததும், பழைய மனைவியான (தமாகா) எங்களைக் கழற்றிவிட்டுவிட்டது.
தி.மு.க.வை விட்டு விலகினாலும் த.மா.கா நல்ல பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. எங்களுக்கு ஒரு முறை ஆதரவு தாருங்கள். நாங்கள் நல்லபடிஆட்சி நடத்திக் காட்டுகிறோம் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications