தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 29 அதிமுகவினருக்குக் குற்றப்பத்திரிக்கை

சென்னை:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 29 அ.தி.மு.க வினருக்கு தர்மபுரி முதலாவது ஜூடிசியல்மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிப்ரவரி 2 ம் தேதி இரண்டு ஆண்டு சிறை தண்டனைவழங்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

தர்மபுரி இலக்கியம்பட்டி அருகே கோவை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்தபஸ்சை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. இதில், கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் உயிரோடு எரிந்தனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க வைச் சேர்ந்த 29 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அனைவரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வரும் வீரமணி, உதயகுமார் உள்பட 31 பேர் மீது கடந்த ஏப்ரலில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை, சிபிசிஐடி வக்கீல் நடராஜன் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் இருவர் நீங்கலாக 29 பேருக்கு நகல் வழங்கலாம் என்றமனுவை நீதிபதி குணவதியிடம் சமர்ப்பித்தார்.

அப்போது அதிமுக வக்கீல் குமரவேல் எழுந்து, இவ்வழக்கில் இருவர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீதி 29பேருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்படுவது திட்டமிட்ட செயலாக உள்ளது. குற்றப்பத்திரிக்கை நகல் முழுவதையும் தமிழில் தர வேண்டும் என்று கூறினார்.இதையடுத்து அவருக்கும், சிபிசிஐடி வக்கீல் அசோக் குமாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

இறுதியில், நீதிபதி குணவதி 29 அ.தி.மு.க வினருக்கும் 2464 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையின் நகலை வழங்கினார். பின்னர், வழக்கு கிருஷ்ணகிரிசெசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், வரும் ஆகஸ்ட் 7 ம் தேதி அங்கு மீண்டும் ஆஜராகும்படியும் நீதிபதி குணவதி உத்தரவிட்டார்.

அதிமுக எம்பிக்கள் மனு தள்ளுபடி:

இதற்கிடையே, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அ.தி.மு.க எம்பிக்கள் தாக்கல் செய்த மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

அ.தி.மு.க எம்பிக்கள் ஓ.எஸ்.மணியனும், திண்டுக்கல் சீனிவாசனும் உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயசிம்மபாபு, இப்ராகிம் கரீப்துல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மனுவைத் தள்ளுபடி செய்தது.

அவர்கள் தங்களது தீர்ப்பில், ஓ.எஸ்.மணியனும், திண்டுக்கல் சீனிவாசனும் சம்பவம் நடந்த உடனேயே பொதுநலன் கருதி சிபிஐ விசாரணை செய்யக் கோரி மனுச்செய்திருந்தால் இந்த மனு ஏற்கப்பட்டிருக்கும்.

ஆனால் இவ்வழக்கில் அ.தி.மு.க வினர் குற்றம்சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டபின் தங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிக்கு கெட்டபெயர்வந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் மனு போட்டுள்ளனர். அதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+