தமிழகத்தில் இன்று
திட்டமிட்டபடி ஓமனில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
துபாய்:
ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நவம்பர் 10-ம் தேதி ஒருநாள் கண்காட்சி கிரிக்கெட்போட்டி நடைபெறும்.
இப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ள ஓமன் நாட்டைச் சேர்ந்த மது சாஸ்ரானி, இத் தகவலைக் கூறியதாக கல்ஃப் நியூஸ் பத்திரிக்கை செய்து வெளியிட்டுள்ளது.
மும்பையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் பாட்டில் மற்றும் ஆல்வில் சல்தானா ஆகியோருக்குச் சொந்தமான குளோபல் மேனேஜ்மெண்ட்ஈவென்ட் என்ற நிறுவனத்தின சார்பில் இப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மஸ்கட்டில் உள்ள சுல்தான் கப்பூஸ் விளையாட்டு வளாகத்தில் நவம்பர் 10-ம் தேதி இப் போட்டி நடைபெறும். வழக்கமான தலா 50 ஓவர்கள்கொண்டதாக இப் போட்டி நடைபெறும்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலமாக மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருவதை அடுத்தும், சில நாட்களுக்கு முன் கபில்தேவ்,அசாருதீன், ஜடேஜா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகள் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்தும்இப் போட்டி நடைபெறுமா என்று சந்தேகம் இருந்தது.
ஆனால், திட்டமிட்டபடி இப் போட்டி நடைபெறும் என்று மது ஜாஸ்ரானி கூறியுள்ளார். சல்தானாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது,நிச்சயம் போட்டி நடைபெறும் என்றும், ஓமனில் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்கவேண்டும் என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர்கூறியதாக மது ஜாஸ்ரானி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும் ஓமனில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அதில் ஜாகிர் அப்பாஸ் தலைமையிலான பாகிஸ்தான்அணி, சந்தீப் பாட்டீல் தலைமையிலான இந்திய அணியைத் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications