தமிழகத்தில் இன்று
அந்த 45 நிமிடங்கள்...
மும்பை:
சிவ சேனா தலைவர் பால் தாக்கரேக்கு எதிராக மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த வழக்கை போய்வாடா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது. இதையடுத்து கைதாகி 45 நிமிஷத்தில் தாக்கரே விடுதலை செய்யப்பட்டார்.
1992-93-ம் ஆண்டு மும்பையில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரம் தொடர்பாக தனது பத்திரிக்கையில் தலையங்கம் எழுதினார் பால் தாக்கரே.
கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணைக் கமிஷன், பால் தாக்கரேயின் தலையங்கம் வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது என்றும், பால்தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்று தற்போதைய மகாராஷ்டிர அரசு பால் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி இது தொடர்பாக போய்வாடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்காக செவ்வாய்க்கிழமை காலை பால் தாக்கரே கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவ் வழக்கை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் பி.பி. காம்ப்ளே விசாரித்தார். பால் தாக்கரே மீதான இவ் வழக்கு காலாவதியாகிவிட்டது.ஆகவே, வழக்கைத் தள்ளுபடி செய்வதுடன் பால் தாக்கரேவையும் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.
பால் தாக்கரே சார்பில் வழக்கறிஞர் அடிக் ஷிரோத்கர் ஆஜரானார். பால் தாக்கரே மீதான இவ் வழக்கு 7 ஆண்டுகள் பழையதாகி விட்டது.
இந்த வழக்கு காரணமாக மும்பையில் பதற்றம் நிலவுகிறது. பால் தாக்கரேக்கு தண்டனை விதிக்கப்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார்ஷிரோத்கர்.
சுமார் 45 நிமிடங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு வழக்கைத் தள்ளுபடி செய்தும் பால் தாக்கரேயை விடுதலை செய்தும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவைக் கேட்டதும் நீதிமன்றத்துக்கு வெளியே நின்றிருந்த சிவசேனைத் தொண்டர்கள் மகிழ்ச்சியில் கோஷமிட்டனர்.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications