தமிழகத்தில் இன்று
அன்று மேட்ச் பிக்ஸிங் ... இன்று செக்ஸ்
அகமதாபாத்:
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இப்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டை முதலில் தொடங்கியவர் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மனோஜ் பிரபாகர்.
இப்போது செக்ஸ் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளவர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கபில் தேவின், தொழில் பார்ட்னர் ஹைரென் ஹாதி.
போட்டிகளில் கலந்து கொண்ட பல இந்திய வீரர்கள் செக்ஸில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் யார் என்ற பட்டியலை அவர் வெளியிடவில்லை.
இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அந்தந்த பகுதி பெண்களுடன் இந்திய கிரிக்கெட்வீரர்கள் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொண்டனர் என்கிறார் அவர்.
தாரா என்ற குஜராத்தி தொலைக்காட்சிக்கு, இந்திய கிரிக்கெட் வீரர்கள், மைதானத்துக்கு வெளியே வைத்திருந்த தொடர்பு குறித்து அவர் அளித்தபேட்டியில், தாங்கள் செக்ஸ் தொடர்பு வைத்திருந்ததை கிரிக்கெட் வீரர்களே என்னிடம் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவுக்கு இந்தியஅணி சமீபத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணமே இதற்குச் சான்று.
தென் ஆப்பிரிக்காவில் சன் சிட்டி தொடக்க விழா நடைபெற்றது. இது தொடர்பாக நடந்த விருந்தில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் நள்ளிரவு 2 மணிவரை தங்களது அறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையிலும், கிரிக்கெட் வீரர்கள் சிலர் தெரிவித்த தகவல்களையும் வைத்துப் பார்த்தபோது அவர்கள், சன் சிட்டியில் உள்ள அழகிகளுடன் செக்ஸில்ஈடுபட்டது தெரிந்தது என்றார் ஹாதி.
செக்ஸில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டது உண்மை. ஆனால் யார், யார் செக்ஸில் ஈடுபட்டனர் என்பதைத் தெரிவிக்க மாட்டேன் என்றார்அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications