தமிழகத்தில் இன்று
குஜராத்தில் 3 மாதத்தில் 5 சிங்கங்கள் சாவு
அகமதாபாத் (குஜராத்):
குஜராத் மாநிலம் ஜுனாகாத் மாவட்டத்திலுள்ள கிர் காட்டில் 3 மாதங்களில் ஐந்துசிங்கங்கள் இறந்துள்ளன.
ஒரிஸா மாநிலத்தில் சமீபத்தில் பல புலிகள் மர்மமான முறையில் இறந்தது பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின் மத்தியப் பிரதேசத்தில் விஷம் கலந்த பயிரைஉண்டதால் மயில்கள் இறந்தன.
இப்போது இந்த வரிசையில் சிங்கங்கள் சேர்ந்துள்ளன. ஜுனாகாத் மாவட்டத்திலுள்ளகிர் காட்டில் மூன்று மாதத்திற்குள் ஐந்து சிங்கங்கள் இறந்துள்ளன. எப்படி இவைஇறந்தன என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால், சிங்கங்கள் இயற்கையாகவேஇறந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிரேதப் பரிசோதனையிலும், இயற்கையான சாவு என்றுதான் கூறப்பட்டுள்ளது.காட்டிலுள்ள பூனைகளுக்கு வந்துள்ள நோய் சிங்கங்களுக்குப் பரவியிருக்கவாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் சிங்கம் மற்றும் பூனைகளின்உடல்கள் சுமார் 40 கிலோ மீட்டர் இடைவெளியில் காணப்பட்டன என வனவிலங்குமற்றும் வன சுற்றுப்புறச்சூழலின் கூடுதல் துணை செயலாளர் பி. பாசு கூறினார்.
இறந்து போன ஐந்து சிங்கங்களில் நான்காவதாக இறந்த சிங்கம் ராபீஸ் நோய் தாக்கிஇறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அது உண்மையாக இருந்தால் காட்டில், ராபீஸ்நோய் பரவாமல் தடுப்பது கடினமாக இருக்கும் என அகமதாபாதில் உள்ள மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத மிருகக்காட்சி சாலை அதிகாரி ஒருவர் கூறுகையில்,ராபீஸ் நோய் மிருகக்காட்சி சாலையில் பரவாமல் தடுப்பது எளிது. ஆனால்காட்டிற்குள் பரவாமல் தடுப்பது கடினம். ஏனென்றால் காடு பல நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அங்கு பரவியிருக்கும் மிருகங்கள் அனைத்திற்கும்நோய்த் தடுப்பு ஊசி கொடுப்பது என்பது கடினமாகும்.
ராபீஸ் நோயால் தாக்கப்பட்டிருந்த சிங்கம் மற்ற சிங்கங்களுடன் தொடர்புகொண்டிருந்தால் அது மற்ற சிங்கங்களுக்கும் பரவும் அபாயத்தைத் தவிர்க்க முடியாதுஎன தெரிவித்தார்.
10 வயதான சிங்கம் ஒரு சிங்கம், துளிஷியாம் பகுதியில் இறந்தது. இரண்டு நாள்கழித்து இன்னொரு சிங்கம், பாச்சேல் கிராமத்தில் இறந்தது. மின்சாரக் கம்பியைமிதித்ததால் இது இறந்தது. மொத்தம் ஐந்து சிங்கங்கள் கடந்த மூன்று மாதங்களில்இறந்துள்ளன. மே 18ம் தேதியன்று 17 வயதான பெண் சிங்கம் ஒன்று இறந்தது. அதுஇயற்கையான முறையிலேயே இறந்தது. ஒரு ஆசிய சிங்கத்தின் சராசரி வயது 15வயதாகும்.
ஜுன் 20-ம் தேதி 15 பிறந்து 15 நாளான சிங்கக்குட்டி ஜாசாதர் பகுதியில்
இறந்து போனது. ஜுன் 22-ம் தேதி இரண்டரை வயதான சிங்கக்குட்டி விஸ்வாதர்பகுதியில் இறந்தது. அதுவும் இயற்கையான முறையிலேயே இறந்தது.
கிர் பகுதியில்தான் ஆசிய சிங்கங்கள் அதிகமாக உள்ளன. இங்கு 330 ஆசியசிங்கங்கள் உள்ளன. 1995-ம் ஆண்டு கணக்குப்படி இங்கு 305 சிங்கங்கள் இருந்தன.கடந்த ஐந்து ஆண்டுகளில் 94 சிங்கங்கள் இறந்துள்ளன என அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்,
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications