தமிழகத்தில் இன்று
ஓய்வுபெற்றார் "தங்க மங்கை"
டெல்லி:
இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பி.டி. உஷா, சர்வதேச தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமைஅறிவித்தார்.
கேரளத்தைச் சேர்ந்த உஷா, இந்தியாவின் சார்பில் சர்வதேச அளவில் பல தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைப் பெற்றார். தனதுதிறமையால் பல பதக்கங்களை வென்று தடகள விளையாட்டில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.
ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக், உலக தடகளப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டிகளில் தனது திறமையை நிரூபித்த பல தங்கம், வெள்ளி மற்றும்வெண்கலப் பதக்கங்களைப் பெற்றார்.
முதன்முதலாக 1982-ல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் கலந்து கொண்ட உஷா, 1986--ல் சியோலில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் 4 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
1984-ல் லாஜ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் 4-வது இடம் பெற்றார். அப்போது அந்த தூரத்தை அவர்கடக்க எடுத்துக் கொண்ட நேரம் அவரது சிறந்த நேரமாகும் என்று குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் செய்தியாளர்களைச் செவ்வாய்க்கிழமை சந்தித்த உஷா, தனது ஓய்வை அறிவித்தார்.
தனது காலில் அடிபட்டதாகவும், ஆனால் கால் குணமாக நாளாகும் என்பதால் ஜகார்த்தாவில் நடைபெற உள்ள தடகளப் போட்டிகள் மற்றும்சிட்னியில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஓய்வு பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். இருப்பினும் கடுமையான, தீவிர யோசனைக்குப் பிறகே இதை அறிவிக்கிறேன். திறமைகுறைந்துவிட்டதாகக் கருதி எனது ஓய்வை நான் அறிவிக்கவில்லை. என்னால் இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
துரதிருஷ்டவசமாக எனது காலில் அடிபட்ட காரணத்தால்தான் நான் ஓய்வு பெறுகிறேன். மேலும் எனது மகனிடம் அன்பு செலுத்தவும், அவனை நன்குகவனித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்.
அதனால்தான், 2002-ல் நடைபெற உள்ள ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கு கொள்ள பயிற்சி பெறவும் விரும்பவில்லை.
சர்வதேச தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், கோழிக்கோடு அருகே கொய்லாண்டி என்ற இடத்தில் உஷா தடகளப் பள்ளி அமைக்கும்பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். அப் பள்ளியின் மூலம் பல தடகள வீரர்களை உருவாக்கப் பாடுபடுவேன்.
10 ஆண்டுகளுக்கு முன் பீஜிங் ஆசியக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நான் ஓய்வு பெறுவதாக அறிவித்தேன். ஆனால் மீண்டும் தடகளப் போட்டிகளில்இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டேன். இந்த முறை மீண்டும் வரமாட்டேன். கஷ்டமாக இருந்தாலும் இதுதான் எனது இறுதி முடிவு.
20 ஆண்டுகளாக தடகள விளையாட்டில் இருந்துவிட்டேன். பல ஏற்ற, இறக்கங்களைப் பார்த்தேன். மக்களும், பத்திரிக்கையாளர்களும் எனக்கு நல்லஒத்துழைப்பு கொடுத்தனர். அவர்களுக்கு எனது நன்றி என்றார் உஷா.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications