தமிழகத்தில் இன்று
பிக் பாக்கெட்டுகளை வைத்து மிரட்டுவதா?...கேட்கிறார் வாழப்பாடி
விழுப்புரம்:
பஸ் ஸ்டாண்டுகளில் பிளேடு போட்டு பிக் பாக்கெட் அடிக்கும் நபர்களை வைத்துக் கொண்டு பாட்டாளி மக்கள்கட்சித் தலைவர் ராமதாஸ் மிரட்டுகிறார். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த வன்னியர் சங்க செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வாழப்பாடி ராமமூர்த்திபேசியதாவது:
ரவுடிகள், சாராயம் காய்ச்சுபவர்கள், பஸ்-ஸ்டாண்டில் பிளேடு போடுபவர்களை வைத்துக்கொண்டு மிரட்டல்விடுத்து வருகிறார் ராமதாஸ். இதைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் பனங்காட்டு நரி. சலசலப்புக்குஅஞ்ச மாட்டோம்.
ராமதாஸ் ரூ 5 க்கும் ரூ 10 க்கும் அல்லாடிக்கொண்டிருந்த போதே எம்.பியாக இருந்தவன் நான். எனது அரசியல்அனுபவம் உங்களது முக்கால்வாசி வயது. பைத்தியம் பிடித்தவர்களுக்கு எப்படி வைத்தியம் பார்க்க வேண்டும்என்று எங்களுக்குத் தெரியும்.
ராமதாஸ் அநாகரிகமாக அரசியல் நடத்தினால் நாங்களும் அநாகரிகமான அரசியலை நடத்துவோம். வீணாகவிளையாட வேண்டாம்.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது போல் தற்போது உங்களுக்குப் பணம்வந்திருக்கிறது. இதெல்லாம் நாங்கள் வாங்கிக்கொடுத்த டாடா சுமோக்கள். பலரிடம் கட்டப் பஞ்சாயத்துப் பண்ணிவாங்கிய கார்கள் எல்லாம் நிரந்தரமானவை அல்ல.
இப்படி அரசியலில் ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் காணாமல் போனதுண்டு. நாங்கள் ராமதாசுக்கு சரியானபாடம் கற்பிப்போம். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களில் ராமதாஸ் ஈடுபட்டால் அவரை நாங்கள்தமிழ்நாட்டிலேயே உலவ விட மாட்டோம்.
மக்கள் கைதட்டுவதற்காக இப்படிப் பேசவில்லை. நீங்கள் செல்லுகின்ற பாதை சரியில்லை என்பதைசுட்டிக்காட்டுகிறோம். விழுப்புரத்தில் என் மீது பலர் தாக்குதல் நடத்தினார்கள். எல்லா இடத்திலும் பாதுகாப்புகொடுத்த போலீஸ், விழுப்புரத்தில் பாதுகாப்பு கொடுக்கத் தவறி விட்டது என்றார் அவர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications