தமிழகத்தில் இன்று
திருச்சியைக் கலக்கிய நக்சலைட் கைது
அரியலூர்:
திருச்சியைக் கலக்கி வந்த நக்சலைட் செல்வம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் அரியலூரைச் சேர்ந்த செல்வம் தமிழ்நாடு விடுதலைப் படை என்ற நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் மீது பல வழக்குகள்உள்ளன. இவரை நீண்ட காலமாக போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை அரியலூர் அண்ணாசாலை பயணியர் விடுதிக்குச் செல்லும் வழியில் செல்வம் உட்கார்ந்திருந்தார். அப்போது அவ்வழியேசென்ற இன்ஸ்பெக்டர் பாலகுரு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் அவரிடம் 5 ஜெலட்டின் குச்சிகள், 3 டெட்டனேட்டர்கள் மற்றும் ஒயர்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் நிலையத்திற்குக்கொண்டு சென்று செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து அரியலூர் நீதிமன்றத்தில் செல்வம் ஆஜர்படுத்தப்பட்டார். அரியலூர் மாஜிஸ்ட்ரேட் இளங்கோவன் அவரை 15 நாட்கள் காவலில் வைக்கஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications