தமிழகத்தில் இன்று
புலிகளிடமிருந்து தப்பி ஏஜென்டுகளிடம் சிக்கும் தமிழர்கள்
மன்னார்:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதால், அங்கிருந்து தப்பி வரும் தமிழர்களை, இந்தியாமற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில ஏஜென்டுகள் ஏமாற்றி கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அதிகாரி, வி.விஸ்வலிங்கம் இதுகுறித்துக் கூறுகையில், யாழ்ப்பாணம் பகுதியில் போர் உச்சத்தை அடைந்திருப்பதால், அங்கிருந்துநூற்றுக்கணக்கான தமிழர்கள் பாதுகாப்பான இடத்திற்கு தப்பி வருகின்றனர். இவர்களை ஆசை வார்த்தை கூறி இந்த ஏஜென்டுகள் கடத்தி வருகின்றனர்.
இக்கடத்தலில் ஈடுபடும் ஏஜன்ட்டுகள் புத்திசாலித்தனமான பல உத்திகளைப் பயன்படுத்தி யாருக்கும், எந்தவித சந்தேகமும் வராமல் ஆள்கடத்தும்வேலையில் ஈடுபடுகிறார்கள். தப்பி வரும் தமிழர்களை தென்னிந்திய சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தைகள் கூறிகடத்துகிறார்கள்.
கடத்தப்படுபவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ 5000 வசூலிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு சரியாகஉணவோ, நீரோ கொடுக்காமல், தமிழக கடற் பகுதியில் உள்ள மணல் திட்டுக்களில் இறக்கி விட்டுத் தப்பி விடுகிறார்கள்.
கடந்த சில வாரங்களில் இதுபோல, இலங்கையிலிருந்து ஏஜன்ட்டுகள் மூலம் கடத்தப்பட இருந்த பலரை போலீசார் தடுத்து மீட்டுள்ளனர். இந்தக் கடத்தில்சம்பவத்தில், இலங்கை மற்றும் இந்திய மீனவர்களும் மறைமுகமாக ஈடுபடுகிறார்கள். படகில் ஆட்களை கடத்திக்கொண்டு வரும் ஏஜன்டுகளுக்குஇவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள் என்றார்.
அரசு அவசர ஆலோசனை: ஆள் கடத்தலைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. மன்னார் மாவட்ட அதிகாரிகள் மற்றும்அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராம அதிகாரிகள் ஆகியோர்களுடன் ஆள்கடத்தல் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக அவசர ஆலோசனைக்கூட்டத்தை அரசு கூட்டியுள்ளது.
மன்னார் எம்.பி.ஆதி கலாநாதன் கூறுகையில், ஆள்கடத்தல் பிரச்சனை குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன் என்றார். மன்னார்போலீஸ் அதிகாரி கிரிபந்தா விஜிரத்னே, கூறுகையில், ஆள்கடத்தல் தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
யு.என்.ஐ.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications