தமிழகத்தில் இன்று
கோவை த.மா.கா.வில் வெடித்த கோஷ்டிப் பூசல்
கோவை:
கோவை மாவட்டத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் துவங்கியுள்ளது.இந்த மோதல் வட்ட அளவிலானக் கூட்டங்களில் பகிரங்கமாக வெடிக்கத்தொடங்கியுள்ளது.
கோவை மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக கோவைத்தங்கம் இருந்து வருகிறார். இவர் என்ஜினியர் ராதாகிருஷ்ணன் என்பவரைத் துணை த்தலைவராகவும் மற்றும் பலரை நிர்வாகிகளாகவும் நியமித்தார். இதில்அதிருப்தியடைந்த ராதாகிருஷ்ணன், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து இப்பதவிக்கு கங்கா ஆறுமுகம் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர்பொறுப்பேற்ற பின்னர், சில நாட்களிலேயே தனது ராஜினாமாக் கடிதத்தைமூப்பனாருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, தற்போது மோதல் வலுத்துள்ளது.
அடுத்து தேர்தல் பணிக்காக தமிழ்மாநில காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதற்காககோவையில் ஒவ்வொரு வட்டமாகப் பிரித்துக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் கூட்டங்களுக்குபார்வையாளராக பேராசிரியர் பாட்ஷா பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் கோவை தங்கம் மற்றும்என்ஜினியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பகிரங்கமாக மோதத் தொடங்கியுள்ளனர்.இந்தக் கூட்டத்தில் கோவை தங்கத்தின் ஆதரவாளர்கள், ராதாகிருஷ்ணனின்ஆதரவாளர்களைக் கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுக்கும் முயற்சியில்ஈடுபட்டனர்.
இதனால் சிங்காநல்லூரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த ராதாகிருஷ்ணன்மோதலில் ஈடுபட்டனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டாவது நாளாகநடந்தக் கூட்டத்திலும் இந்த மோதல் நீடித்தது. பாட்ஷா முன்னிலையிலேயே இந்தமோதல் வெடிக்கத் துவங்கியது.
இந்நிலையில் சில தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது புகார்களைமூப்பனாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சிலர் சென்னை சென்றுமூப்பனாரைச் சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
