தமிழகத்தில் இன்று
கைதானார் ஜார்ஜ் ஸ்பீட்
சுவா:
பிஜி புரட்சியாளர்கள் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
தலைநகர் சுவாவில் புரட்சியாளர்களின் செய்தித்தொடர்பாளர் ஜோ நாடா, ஸ்பீடு கைது செய்யப்பட்டதை நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக மே 19 ம் தேதி ஆயுதப்புரட்சி மூலம் ஸ்பீட் தலைமையிலான புரட்சியாளர்கள் ஆட்சியைப் பிடித்தனர். இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திரபால் செளத்ரி மற்றும் அமைச்சர்களை நாடாளுமன்றத்தில் சிறை வைத்தனர்.பின்னர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
ராணுவ ஆட்சியாளர்களுக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் ஏறத்தாழ 56 நாட்களுக்களுப்பிறகு பிணைக்கைதிகள்அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பிணைக்கைதிகளை விடுவித்த பிறகும் கூட புதிய ஆட்சி அமைப்பதற்கு ஸ்பீட், முட்டுக்கட்டை போட்டு வந்தார். இந்தியர்கள் யாரும் அமைச்சரவையில்இடம்பெறக் கூடாது என்று அவர் கூறி வந்தார். இந்நிலையில் ராணுவம் அவரைக் கைது செய்துள்ளது.












Click it and Unblock the Notifications