தமிழகத்தில் இன்று
கார்கில் ஹீரோக்களுக்கு இந்தியாவின் சல்யூட்
டெல்லி:
கார்கில் போரில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும்பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகள் புதன்கிழமை இரவு 8 மணி அளவில் ஏற்றிவைக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்து நடந்த போரில்ஏராளமான இந்திய வீரர்கள் இறந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும்கார்கில் போர் வீரர்கள் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட ஏராளமானவர்கள்மலர் வளையம் வைத்து கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கார்கில் போர் வீரர்கள் நினைவு தினத்தின் மற்றொரு நிகழ்ச்சியாக டெல்லியில் பல இடங்களில்புதன்கிழமை இரவு மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனைத் தொடர்ந்து சுமார் 522 பேர்மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தனர். வெற்றியைக் குறிக்கும் வகையில் ஆங்கில எழுத்தான வி எழுத்துவடிவத்தில் அந்த 522 மெழுகுவர்த்திகளும் வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டன.
இரவு 8 மணிக்கு நடந்த இந்த நிகழ்ச்சியின்போதே அதே நேரத்தில் இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான்ஜோதியைச் சுற்றி பிரதமர் வாஜ்பாய், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோர்தலைமையில் சுமார் 1500 பள்ளிக் குழந்தைகளும் முப்படை அதிகாரிகளும் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகே துணை குடியரசுத் தலைவர் கிருஷ்ணகாந்த், மாநிலங்களவை சபாநாயகர் பாலயோகி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெழுகுவர்த்திஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நாடு முழுவதும் புதன்கிழமை இரவு 8 மணி அளவில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து கார்கில்ஹீரோக்களுக்கு அஞ்சலி செலுத்தும்படி மத்திய அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மெழுகுவர்த்திகள்ஏற்றி வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications