தமிழகத்தில் இன்று
ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் நுழைந்த 4 பாகிஸ்தானியர்கள் கைது
டெல்லி:
பாகிஸ்தான் எல்லையிலிருந்து குஜராத் மூலம் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற நான்கு பேரை சிபிஐ கைது செய்து, அவர்களிடமிருந்து ஆயுதங்கள்,வெடிமருந்துகள், போதைப்பொருட்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தது.
ஜாவித் கான், சிரானி கான், அயுப்கான், அப்துல் கரீம் ஷேக் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டவர்கள். இதுகுறித்து சிபிஐ இயக்குநர் பி.சி.சர்மாகூறுகையில், பாகிஸ்தான் எல்லையிலிருந்து லாரி மூலம் குஜராத்திற்கு நுழைய முயன்ற போது இந்த நான்கு பேரையும் சந்தேகத்தின் பேரில் சிபிஐஅதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வந்த லாரியின் டயருக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. டயரிலிருந்து 25துப்பாக்கிகள், 50 சுற்று துப்பாக்கிக் குண்டுகள், 6 கிலோ ஹெராயின், 200 சுற்றுக்கள் சுடக்கூடிய வெடிப்பொருட்கள் போன்றவைகைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் விசாரணைக்காக டெல்லிக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் எந்த கடத்தல் அல்லது தீவிரவாதக்கும்பலைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் அவர்கள் போதைப் பொருட்களை யாரிடம் விற்பனை செய்கிறார்கள்? அவர்கள் மறைத்து வைத்திருந்தஆயுதகள் ஆகியவை குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இந்திய எல்லையில் ரூ 310 கோடி பெறுமானமுள்ள 31 கிலோ போதைப் பொருட்கள் கடத்த முயன்ற கும்பல் கைதுசெய்யப்பட்டு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications