தமிழகத்தில் இன்று
பிரான்ஸ் விமான விபத்தில் 113 பேர் பலி
பாரீஸ்:
பிரான்ஸில் ஜெர்மன் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கன்கார்டு ரக அதிவேக சூப்பர்சானிக் விமானம் வானிலேயே வெடித்துச்சிதறியது. இதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
பாரீஸ் அருகே உள்ள கோனஸ் நகரில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நடந்தது. விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில நிமிஷங்களிலேயே விமானம்வெடித்துச் சிதறியது. விமான என்ஜீன்களி ஒன்று தீப்பிடித்துக் கொண்டதால் விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.
கோனஸ் நகரில் உள்ள இரண்டு ஹோட்டல்களுக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியது. இதில் இரு ஹோட்டல்களும்சேதமடைந்தன. விமானத்தில் இருந்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. விமானத்திலிருந்த 109 பயணிகளும், தரையில் இருந்த நான்கு பேரும் விபத்தில்உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் 96 பேர் ஜெர்மன் நாட்டவர்கள். 2 பேர் டென்மார்க் நாட்டவர்கள். ஒருவர் ஆஸ்திரிய பயணி. 9 பேர் விமான ஊழியர்கள். 4 பேர் தரையில்இருந்தவர்கள்.
விபத்தில் சிக்கிய விமானம் 30 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆங்கிலோ பிரெஞ்சு ரக கன்கார்ட் விமானம் ஆகும். பணக்காரர்கள்மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் சுற்றுலா செல்வதற்கு இந்த விமானத்தைப் பயன்படுத்தி வந்தனர். விமானத்தில் மொத்தம் நான்கு என்ஜீன்கள்உள்ளன.
பெரிய தீப்பந்து போல விமானம் வானிலிருந்து கீழே விழுந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஒருவர் கூறுகையில், அணுகுண்டு வெடித்ததுபோல விமானம் கீழே விழுந்தது என்றார்.
விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் நியூயார்க் நகருக்குச் சென்று கொண்டிருந்த இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications