தமிழகத்தில் இன்று
10 கிலோ ஹெராயின் பறிமுதல்
சென்னை:
தமிழக குற்றப் புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) போலீசார் தமிழகம் மற்றும் பெங்களூரில் நடத்திய சோதனையில்10.7 கிலோ ஹெராயின் மற்றும் வெளிநாட்டு கள்ள நோட்டுகள் சிக்கின.
மதுரையைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் ஜுலை 24ம் தேதி கைது செய்யப்படடார். அவரிடமிருந்து 700 கிராம்ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தின்படி பெங்களூர் சென்ற மதுரை போலீசார்,பெங்களூர் போலீசாரின் உதவியுடன் 10கிலோ ஹெராயினை லாட்ஜ் ஒன்றிலிருந்து கைப்பற்றினர்.
ஹெராயினைப் பதுக்கி வைத்திருந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேவிலால், மதன் சிங் ஆகியஇருவரையும் கைது செய்தனர்.
இதுவரை சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில் 36,412 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.உலக சந்தையில் அதன் மதிப்பு 38.2 கோடி ரூபாயாகும்.
கைது செய்யப்பட்ட மூவரும் கொடுத்த வாக்குமூலத்தின்படி சிறப்பு போலீஸ் படை சிவகாசி மற்றும் மதுரையைச்சேர்ந்த செல்வகுமார், ரவி ஆகிய இருவரை கைது செய்தனர்.
மாலத்தீவின் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 333 கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ 5 லட்சமாகும். இதன்தொடர்பாக ராஜ்கபூர், கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைதான ஏழு பேரும் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
