தமிழகத்தில் இன்று
ஒத்துழைத்தால் நல்லது....கிரிக்கெட் வீரர்களுக்கு வருமான வரித்துறை அறிவுரை
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக வருமான வரித்துறையினர் மேற்கொண்டுள்ள விசாரணைக்கு கிரிக்கெட் வீரர்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றுவருமான வரித்துறையின் விசாரணைப் பிரிவு இயக்குநர் எஸ்.சி. பாரிஜா தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் கட்டுப்பாட்டு அதிகாரிகள், கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் ஆகியோர் மேட்ச் பிக்ஸிங்கில்ஈடுபட்டதாக சமீப காலமாக பல புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு) விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டவர்கள் லட்சக்கணக்கில்லஞ்சம் வாங்கியுள்ளனர் என்ற புகார் தொடர்பாக வருமான வரித்துறையும் விசாரணையில் இறங்கியது.
இந் நிலையில், ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் கபில்தேவ், ஜடேஜா, மோங்கியா, அசாருதீன், ஜக் மோகன் டால்மியா மற்றும் கிரிக்கெட்சூதாட்டக்காரர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் சுமார் 90 இடங்களில் இச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச் சோதனையில் பல ஆவணங்கள், வீடுகளின்தஸ்தாவேஜுகள், கணக்கில் காட்டப்படாத பணம் என பலவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சோதனையின் ஒரு பகுதியாக முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் 17 வங்கி லாக்கர்கள் சீல்வைக்கப்பட்டன. சுமார் 200-க்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை அவர்கள் வைத்திருந்ததாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனை பற்றி பாரிஜா கூறியதாவது:
நாங்கள் சீல் வைத்த வங்கி லாக்கர்களில் இரண்டை செவ்வாய்க்கிழமை திறந்து சோதனை செய்தோம். ஒரு லாக்கர் கிரிக்கெட் வீரருக்கும்,மற்றொன்று அவரது உதவியாளருக்கும் சொந்தமானது.
லாக்கர்களில் இருந்தவை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை தொடரும். இது குறித்து இப்போதைக்கு வேறு தகவல்களைத்தெரிவிக்க முடியாது.
வருமான வரித்துறையினரின் விசாரணைக்குக் கிரிக்கெட் வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும். இதுவரை அவர்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
இது தொடரும் வரை அவர்களை நாங்கள் துன்புறுத்தமாட்டோம். கிரிக்கெட் வீரர்கள் தாங்களாகவே முன்வந்து மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதுதொடர்பான ஆவணங்களைக் காட்டி வருகின்றனர்.
ஜடேஜா வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரி ஒருவர், ரூ 50 ஆயிரம் கொடுத்தால் வழக்கைத் தள்ளுபடி செய்துவிடுவதாக ஜடேஜாவிடம் கூறியதாகசெய்திகள் வெளியாகியுள்ளன. இது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் எந்த கிரிக்கெட் வீரரும், அதிகாரியும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருந்ததற்கான ஆதாரம் ஏதும்கிடைக்கவில்லை. ஆனால், சில டைரிகளைக் கைப்பற்றியுள்ளோம். அது பற்றி விசாரித்து வருகிறோம்.
அசாருதீன், ஜடேஜா, நிகில் சோப்ரா, அஜய் ஜடேஜா ஆகியோர் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்கள் இந்தியா திரும்பியவுடன் அவர்களிடம் விசாரணைநடத்தப்படும்.
மேற்கண்டவர்களின் வீடுகளில் இன்னும் சோதனை நடத்தவில்லை. சீல் வைத்திருக்கிறோம். அவர்கள் வந்தபிறகு அவர்கள் முன்னிலையில், சோதனைநடத்தப்படும் என்றார் பாரிஜா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications