தமிழகத்தில் இன்று
3 சிவசேனை அமைச்சர்கள் "பல்டி- -- ராஜினாமா வாபஸ்
மும்பை:
மும்பையில் சிவசேனைக் கட்சித் தலைவர் பால்தாக்கரே விவகாரம் தொடர்பாக ராஜினாமா செய்த மத்திய அமைச்சர்கள் மனோகர் ஜோஷி, சுரேஷ்பிரபு, பாலா சாகிப் விகே பாட்டீல் ஆகியோர் தாக்கரே விடுதலை செய்யப்பட்டதையடுத்து தங்களது ராஜினாமாவை வாபஸ் பெற்றனர்.
மும்பையில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், பால்தாக்கரே விடுவிக்கப்பட்டது குறித்து தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், தங்கள்ராஜினாமாக்களை வாபஸ் பெற்றுக்கொண்டு புதன்கிழமை முதல் பணியில் தொடர்வதாகவும் தெரிவித்தனர்.
மும்பையில் 1992-93 ம் ஆண்டில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரத்தின்போது, சிவசேனை கட்சி சார்புப் பத்திரிக்கையான சாம்னாவில் தலையங்கம் எழுதினார்பால்தாக்கரே. தலையங்கம் கலவரத்தை மேலும் தூண்டுவதாக தாக்கரே மீது குற்றஞ்சாட்டப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதையமகாராஷ்டிர அரசு அவர் மீது இத்தலையங்கம் குறித்து வழக்குத் தொடர்ந்தது.
இதையடுத்து மும்பையில் சிவசேனை கட்சித் தொண்டர்கள் ஆர்பாட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர்.
பால்தாக்கரேயைக் கைது செய்வதைக் கண்டித்து, சிவசேனை கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மனோகர் ஜோஷி, சுரேஷ் பிரபு, பாலாசாகிப் விகே பாட்டீல்ஆகியோர் ராஜினாமா செய்தனர். இருப்பினும் பிரதமர் வாஜ்பாய் இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் தாக்கரே செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மும்பை பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்ட்ரேட்பி.பி.காம்ளே, காலம் கடந்து தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி தாக்கரேயை விடுவித்தார்.
இதையடுத்து ராஜினாமா செய்த மூன்று அமைச்சர்களும் தங்களது ராஜினாமாக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications