தமிழகத்தில் இன்று
துப்பாக்கிச் சூட்டில் முடிந்த கோழிப்பண்ணை தகராறு
கோவை:
பொள்ளாச்சி அருகே கோழிப்பண்ணை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தனியார்ஊழியர் படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உதயகுமார் என்பவர் கோழிப் பண்ணை வைக்க ஏற்பாடு செய்துவந்தார். இவரது மனைவி கவிதா.
கோழிப்பண்ணை அமைப்பது தொடர்பாக கவிதாவுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த தனியார் நிறுவன ஊழியர்கணேஷ்பாபு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மனைவியிடம் கணேஷ் பாபு தகராறு செய்வதை கண்டதும் ஆத்திரமடைந்த உதயகுமார் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து கணேஷ்பாபு மீது சுட்டார். இதில் கணேஷ் பாபு காயமடைந்தார். அங்கிருந்த பைக் மீதும்குண்டு பாய்ந்தது. காயமடைந்த கணேஷ் பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனைமலைப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications